Published : 30 Aug 2020 05:51 PM
Last Updated : 30 Aug 2020 05:51 PM

உணவு எப்படியோ உள்ளமும் அப்படியே: பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் வானொலி மூலம் நாட்டுமக்களுக்கு உரையாற்றினார். அதில் உணவு, ஊட்டச்சத்து ஆகியவற்றின் இன்றியமையாத முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார்.

இன்று அவர் இது தொடர்பாக பேசியதாவது:

நம் நாட்டின் குழந்தைகள், மாணவர்கள், தங்களுடைய முழுமையான ஆற்றலையும் வல்லமையையும் வெளிப்படுத்த மிகப்பெரிய ஒரு பங்களிப்பு அளிக்கக்கூடியது என்றால் அது ஊட்டச்சத்து தான். நாடு முழுவதிலும் செப்டெம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாகக் கடைப்பிடிக்கப்படும். நாட்டுக்கும் ஊட்டச்சத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நாட்டிலே ஒரு வழக்கு உண்டு – உணவு எப்படியோ, உள்ளமும் அப்படியே. அதாவது நாம் உண்ணும் உணவைப் பொறுத்தே நமது மனோ-புத்தியின் வளர்ச்சி இருக்கும் என்பதே இதன் உட்பொருள்.

சிசு கர்ப்பத்தில் இருக்கும் போதும், அதன் குழந்தைப் பருவத்திலும், எத்தனை சிறப்பாக ஊட்டச்சத்து அதற்குக் கிடைக்கிறதோ, அத்தனை சிறப்பான வகையில் அதன் மனவளர்ச்சி ஏற்படும், அது ஆரோக்கியமான இருக்கும்.
குழந்தைகளுக்கு ஊட்டம்நிறை உணவு கிடைப்பது அவசியமானது என்பதால், தாய்க்கும் சிறப்பான ஊட்டச்சத்து நிரம்பிய உணவு கிடைக்க வேண்டும். நீங்கள் என்ன உண்கிறீர்கள், எந்த அளவுக்கு உண்கிறீர்கள், எத்தனை முறை உண்கிறீர்கள் என்பது எல்லாம் ஊட்டச்சத்துக்கான விளக்கமல்ல.

உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக் கூறுகள் எந்த அளவுக் கிடைக்கின்றன என்பது தான் முக்கியமானது. உங்களுக்கு இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து கிடைக்கிறதோ இல்லையோ, உப்புச்சத்து கிடைக்கிறதோ இல்லையோ, விட்டமின்கள் கிடைக்கிறதோ இல்லையோ என்பது அல்ல; இவை அனைத்துமே ஊட்டச்சத்தின் முக்கியமான அம்சங்கள். ஊட்டச்சத்துக்கான இந்த இயக்கத்தில் மக்கள் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்று. மக்கள் பங்களிப்புத் தான் இதை வெற்றி பெறச் செய்ய இயலும்.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தத் திசையில் கணிசமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக நமது கிராமங்களில், மக்கள் பங்களிப்பு வாயிலாக இது ஒரு மக்கள் இயக்கமாகவே மாறி வருகிறது. ஊட்டச்சத்து வாரமாகட்டும், ஊட்டச்சத்து மாதமாகட்டும், இவற்றின் வாயிலாக மேலும் மேலும் அதிக விழிப்புணர்வு உருவாக்கப்பட்டு வருகிறது. பள்ளிகள் இதோடு இணைக்கப்படுகின்றன, குழந்தைகளுக்கான போட்டிகள் நடத்தப்படுகின்றன, இவற்றால் விழிப்புணர்வு அதிகரிக்கும் என்பதன் பொருட்டு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எடுத்துக்காட்டாக வகுப்பில் ஒரு class monitor, வகுப்புத் தலைவன் இருப்பதைப் போல, ஊட்டச்சத்துக் கண்காணிப்பு இருக்க வேண்டும், அறிக்கை அட்டையைப் போல ஊட்டச்சத்து அட்டை தயார் செய்யப்பட வேண்டும், இந்த மாதிரியான ஒரு வழிமுறை தொடங்கப்பட இருக்கிறது. ஊட்டச்சத்து மாதத்தில் MyGov தளத்தில், உணவு மற்றும் ஊட்டச்சத்து பற்றிய வினாவிடை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்படவிருக்கிறது, இதோடு கூடவே ஒரு மீம் போட்டியும் நடைபெறும். நீங்களும் இதில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள், மற்றவர்களையும் இதில் பங்கெடுக்க ஊக்கப்படுத்துங்கள்.

குஜராத்தில் அமைந்திருக்கும் சர்தார் வல்லப்பாய் படேல் அவர்களின் ஒற்றுமைச் சிலையைக் காணும் சந்தர்ப்பம் வாய்த்திருக்கலாம்; அல்லது கோவிட் கடந்து சென்ற பிறகு அது பார்வையாளர்களுக்காகத் திறக்கப்படும் போது அதைக் காணும் சந்தர்ப்பம் அமையலாம். அங்கே தனித்தன்மை வாய்ந்த ஒரு ஊட்டச்சத்துப் பூங்கா உருவாக்கப்பட்டிருக்கிறது. விளையாட்டாகவே ஊட்டச்சத்து பற்றிய கல்வியை, கேளிக்கையினூடே அங்கே நம்மால் கண்டறிந்து கொள்ள முடியும்.

பாரதம் ஒரு பரந்துபட்ட தேசம், இங்கே பலவகையான உணவுப் பழக்கங்கள் உண்டு. நமது நாட்டில் ஆறுவகையான பருவகாலங்கள் உண்டு, ஒவ்வொரு இடத்திலும் அங்கு நிலவும் பருவநிலைக்கு ஏற்ப பலவகையான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆகையால் மகத்துவமான விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு இடத்திலும் பருவநிலை, அங்கே இருக்கும் வட்டார உணவு, அங்கே விளையும் உணவுப் பொருட்களுக்கு ஏற்ப, செரிவான ஊட்டச்சத்து நிரம்பிய உணவுமுறை உருவாக்கப்பட வேண்டும்.

எடுத்துக்காட்டாக, சிறுதானிய வகைகளில் ராகி, கேழ்வரகு ஆகியன பயனுள்ள ஊட்டச்சத்து உணவு. ஒரு இந்திய விவசாய சொற்களஞ்சியம் உருவாக்கப்பட்டு வருகிறது; இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிர் செய்யப்படுபவை பற்றியும், அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு பற்றியும் முழுமையான தகவல்கள் இருக்கும். இது உங்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள ஒரு தொகுப்பாக இருக்கும். இந்த ஊட்டச்சத்து மாதத்தில் ஊட்டம் நிறைந்த உணவு மற்றும் உடல்நலம் பற்றியும் நாம் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் வாருங்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x