Published : 30 Aug 2020 02:37 PM
Last Updated : 30 Aug 2020 02:37 PM

ரிக் வேத மந்திரத்தை மேற்கோள் காட்டி விவசாயிகளைப் போற்றிய மோடி

நாட்டு மக்களுக்கு இன்று மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி விவசாயிகளைப் போற்றிப் பேசினார்.

இன்றைய உரையில் அவர் இது தொடர்பாகக் கூறியதாவது:

ஓணம் நமது விவசாயத்தோடு தொடர்புடைய பண்டிகை. இது நமது விவசாயப் பொருளாதாரத்துக்கு ஒரு புதிய தொடக்ககாலம். விவசாயிகளின் ஆற்றலால் மட்டுமே நமது வாழ்க்கை, நமது சமூகம் ஆகியன இயங்குகின்றன. நமது பண்டிகைகள், விவசாயிகளின் கடும் உழைப்பால் மட்டுமே வண்ணம் பெறுகின்றன. நமக்கெல்லாம் உணவு படைப்பவர்களையும், விவசாயிகளின் உயிரளிக்கும் சக்தியையும் மிக உயர்வான வகையில் போற்றுகின்றன நமது வேதங்கள்.

அன்னானாம் பதயே நம:, க்ஷேத்ராணாம் பதயே நம: என்கிறது ரிக்வேத மந்திரம். இதன் பொருள் என்னவென்றால், நமக்கெல்லாம் அன்னமளிப்பவர்களை நாம் போற்றுவோம், விவசாயிகளை நாம் போற்றுவோம் என்பதேயாகும். நமது விவசாயிகள், கொரோனா நிலவும் இந்தக் கடினமான சூழ்நிலைகளிலும் தங்களது ஆற்றலை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். நமது நாட்டில் இந்த முறை முன்பட்டப் பயிர் விதை நடவை, கடந்த ஆண்டை விடவும் 7 சதவீதம் அதிகம் செய்திருக்கிறார்கள்.

நெல்வகை விதைகள் இந்த முறை கிட்டத்தட்ட 10 சதவீதமும், பருப்புவகைகள் சுமார் 5 சதவீதமும், தானியங்கள் விதைகள் சுமார் 3 சதவீதமும், எண்ணெய் வித்துக்கள் சுமார் 13 சதவீதமும், பருத்தி சுமார் 3 சதவீதமும் அதிகம் நடவு செய்யப்பட்டிருக்கின்றன. இதன் பொருட்டு நான் நாட்டின் விவசாயிகளுக்குப் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன், அவர்களின் உழைப்பைப் போற்றுகிறேன்.

இவ்வாறு பேசினார் பிரதமர் மோடி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x