Last Updated : 29 Aug, 2020 04:42 PM

 

Published : 29 Aug 2020 04:42 PM
Last Updated : 29 Aug 2020 04:42 PM

கரோனா வைரஸ்: கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து நாள் ஒன்றுக்கு 9 லட்சம் மாதிரிகள் பரிசோதனை- மத்திய அரசு தகவல்

ஜனவரி 2020 முதல் நடைபெற்றுவரும் கோவிட்-19 க்கு எதிரான போராட்டத்தில், இந்தியா மற்றொரு உச்சத்தை எட்டியுள்ளது. இந்தியா இதுவரை 4 கோடிக்கு மேலான பரிசோதனைகளை நடத்தியுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு கூறியிருப்பதாவது:

மத்திய அரசு, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின், ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாக தீவிரப் பரிசோதனைகள் மற்றும் மேம்பட்ட மருத்துவ சிகிச்சையில் கவனம் செலுத்தியதால், இந்தியா 4,04,06,609 பரிசோதனைகளை மேற்கொண்டு புதிய சாதனை படைத்துள்ளது. 2020 ஜனவரியில் புனேவில் உள்ள ஒரே ஒரு ஆய்வகத்தில் மட்டும் சோதனை நடத்தியதிலிருந்து, இன்று 4 கோடி என்ற மைல்கல்லைக் கடந்து கோவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா நீண்ட தூரம் வந்துள்ளது.

ஒரு நாள் சோதனைகளும் இந்திய புதிய உச்சத்தை அடைந்துள்ளன. இந்தியா ஏற்கனவே, நாள் ஒன்றுக்கு 10 லட்சம் சோதனைகள் செய்யும் திறனைப் பெற்றுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,28,761 மாதிரிகளை இந்தியா பரிசோதித்துள்ளது.

பத்து லட்சம் பேருக்கு 29,280 சோதனைகள் என்ற விகிதத்தில் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மத்திய அரசின் தலைமையிலான கொள்கைகள், மாநில/ யூனியன் பிரதேச அரசுகளால் பயனுள்ள முறையில் செயல்படுத்தப்பட்டு வருவதன் காரணமாக, குணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தினசரிப் பரிசோதனையின் அதிகரிப்பு தொடர்ந்து சராசரியாக தொற்றால் பாதிக்கப்பட்டோர் விகிதத்தில் குறைவை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் சராசரியாக தொற்றால் பாதிக்கப்பட்டோர் விகிதம் 8.57 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது மேலும் குறைந்து கொண்டே வருகிறது.

“பரிசோதனை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சை” என்கிற திட்டத்தைப் இந்தியா பின்பற்றி வருகிறது. இந்த அதிக எண்ணிக்கையிலான சோதனையினால் தான் பாதிக்கப்பட்டவர்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிய முடிகிறது. மேலும், தன் மூலம் அவர்களுடன் நெருங்கியிருந்தவர்களைக் கண்டறிந்து அவர்களைக் குறித்த நேரத்தில் தனிமைப்படுத்துவதன் மூலம் நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்படுகிறது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கும் சரியான நேரத்தில் பயனுள்ள சிகிச்சையை உறுதி செய்ய முடிகிறது.

இந்த மைல்கல்லின் வலுவான நிர்ணயத்திற்கான காரணம், நாடு முழுவதும் சோதனை ஆய்வகங்களின் தொடர்ச்சியான விரிவாக்கம் ஆகும். மத்திய மற்றும் மாநில / யூனியன் பிரதேச அரசாங்கங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு ஒரு சான்றாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x