கருப்புப் பணம்: அக்டோபர் 7-ம் தேதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

கருப்புப் பணம்: அக்டோபர் 7-ம் தேதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
Updated on
1 min read

அயல்நாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பண விவகாரத்தில் விசாரணைக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு அக்டோபர் 7-ம் தேதி தங்களது 4-வது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அயல்நாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை நாட்டுக்கு திரும்பக் கொண்டு வருவதற்கான முயற்சியில் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு தனது 4-வது விசாரணை அறிக்கையை அக்டோபர் 7-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு இதுவரையிலான விசாரணைக் குழுவின் பரிந்துரைகளின் மீது என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்பதை தெரிவிக்கவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கருப்புப் பண விவகாரம் குறித்த விசாரணையில் இன்று தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, எம்.பி.லோகுர், மற்றும் ஏ.கே.சிக்ரி ஆகியோர் கூறும்போது, “சிறப்பு விசாரணைக் குழுவின் பரிந்துரைகளின் மீது அரசு மேற்கொண்ட நடவடிக்கை விவரங்களை அட்டார்னி ஜெனரல் எங்களுக்கு தெரிவிப்பார்” என்று கூறி விசாரணையை அக்டோபர் 28-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

சிறப்பு விசாரணைக் குழுவுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, இதற்கு அடுத்த விசாரணை அறிக்கை மாத இறுதியில் தயாராகிவிடும் என்றும் எனவே அதனை அக்டோபரில் தாக்கல் செய்ய அனுமதி வேண்டும் என்றும் அட்டார்னி ஜெனரல் முகுல் ரொஹாட்கியிடம் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது என்றும் தெரிவித்ததை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.

இடையே பிரசாந்த் பூஷண், சிறப்பு விசாரணைக்குழுவின் 3-வது அறிக்கையில், பதிவு செய்யப்பட்ட அயல்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் அயல்நாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கும் பி-நோட்ஸ் பற்றி செய்தி ஊடகங்களில் வெளிவந்ததை எழுப்பினார்.

ஆனால், நீதிபதிகள் 'அந்த விவகாரம் நீங்கள் குறிப்பிட்ட அறிக்கையில் இருப்பதாக நாங்கள் கருதவில்லை, மே மாதமே நாங்கள் கடைசியாக அறிக்கை பெற்றோம்' என்று மறுதலித்தனர்.

தற்போது அக்டோபர் 7-ம் தேதி 4-வது அறிக்கையை தாக்கல் செய்ய சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in