

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தியின் இரங்கல் செய்தியை இணைத்துள்ளார். வசந்தகுமாரின் ஆன்மா சாந்தி அடையட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவ் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘தமிழக எம்.பி. வசந்தகுமாரின் மறைவு சோகத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால், குலாம் நபி ஆசாத், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, கவுரவ் கோகோய், மகாராஷ்டிர அமைச்சர் பாலாசாகிப் தோராட் உட்பட பல்வேறு தலைவர்கள் எச்.வசந்த குமாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.