

தேசிய விளையாட்டு விருது வழங்கும் நிகழ்ச்சி நாளை காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதனை வழங்குகிறார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை மெய்நிகர் நிகழ்ச்சி மூலமாக தேசிய விளையாட்டு மற்றும் சாகசங்களுக்கான விருது 2020 விருதுகளை வழங்குகிறார்.
புதுடெல்லியில் விஞ்ஞான் பவனில் நடைபெறவுள்ள இந்த விழா நிகழ்ச்சியில், மத்திய இளைஞர் விவகாரம், விளையாட்டு ஆகிய துறைகளுக்கான மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் நரேந்திர துருவ் பாத்ரா மற்றும் பலர் பங்கேற்பார்கள்.
இந்த விழாவில் விருது பெறுவோர் 65 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து – பெங்களூரு, பூனே, சோனிபட் சண்டிகர், கொல்கத்தா, லக்னோ, தில்லி, மும்பை, போபால் ஹைதராபாத், இடாநகர் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து விழாவில் கலந்து கொள்வார்கள். 29 ஆகஸ்ட் 2020 அன்று காலை 11 மணிக்கு விழா தொடங்கும். தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் விழா நேரடியாக ஒளிபரப்பப்படும்.