நாட்டின் வளர்ச்சியே 40 எம்.பி.க்களால் முடக்கம்: காங்கிரஸ் மீது மோடி தாக்கு

நாட்டின் வளர்ச்சியே 40 எம்.பி.க்களால் முடக்கம்: காங்கிரஸ் மீது மோடி தாக்கு
Updated on
2 min read

‘‘மக்களவையை நடத்த விடாமல் 40 எம்.பி.க்கள் சதி செய்கின்றனர். அவர்கள் ஜனநாயகத்துடன் விளையாடுகின்றனர். அவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் மீது குற்றம் சாட்டினார்.

சண்டீகரில் வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டப்பட்ட வீடுகள், அவற்றின் ஒதுக்கீட்டுதாரர் களுக்கு நேற்று வழங்கப்பட்டன. முதல்கட்டமாக 10 ஒதுக்கீட்டு தாரர்களுக்கு வீடுகளுக்கான சாவி கள் மற்றும் பத்திரங்களை பிரதமர் மோடி வழங்கி பேசினார். அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் அப்போது மோடி கூறியதாவது:

மக்கள் தேர்ந்தெடுத்து நாடாளு மன்றத்துக்கு எம்.பி.க்களை அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், 40 எம்.பி.க்கள் மட்டும் (காங்கிர ஸார்) அவையை நடத்த விடாமல் சதி செய்கின்றனர். அவையை முடக்கி ஜனநாயகத்துடன் விளை யாடுகின்றனர். மக்கள் விருப்பத் துக்கு எதிராக செயல்படுகின்றனர். அவர்கள் ஏன் அப்படி நடந்து கொள்கிறார்கள்? அது அவர்க ளுடைய அகந்தையை காட்டுகிறது. இதை விட துரதிருஷ்டவசமானது வேறு எதுவும் இல்லை.

நாடாளுமன்றத்தில் 40 எம்.பி.க் களின் செயல்பாடுகள் ஜனநாயகத் துக்கு உகந்தது அல்ல. நாடாளு மன்றம் செயல்பட வேண்டும். நாடாளுமன்றத்தை விட மக்கள் மன்றம் மிகப் பெரியது. அதனால் தான் என்னுடைய மனக்குமுறலை இங்கு சொல்கிறேன். முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சி அமைக்க மக்கள் தனிப் பெரும்பான்மை பலம் கொடுத் திருக்கிறார்கள். அதேபோல் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் தடுக்கும் அரசியல் கட்சிகளை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

ராணுவத்தின் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்துக்கு கடந்த காங்கிரஸ் அரசு ரூ.500 கோடியை ஒதுக்கியது. ஆனால், பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு அந்தத் திட்டத்தை செயல்பட்ட ரூ.10 ஆயிரம் கோடி தேவை என்று தெரியவந்தது. எனினும், திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக் கப்பட்டது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மருத்துவர்களுக்கு அழைப்பு

சண்டீகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (பிஜிஐஎம்இஆர்) 34-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக மோடி பங்கேற்றார். பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில கவர்னர் கப்தான் சிங் சோலங்கி, மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா, சண்டீகர் பாஜக எம்.பி. கிரண் கெர் உட்பட பலர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கிய 9 மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கி மோடி பேசியதாவது:

மனித குலத்துக்கு குறிப்பாக ஏழைகளுக்கு சேவை செய்வதில் மருத்துவர்களின் பங்கு மகத்தானது. நோய் வரும் முன் காக்கும் வகையில் மருத்துவர்கள் தங்கள் பணியை புனிதமாக கருதி செயல்பட வேண்டும். எந்தவொரு செயலும் ஏழைகள், நலிந்தோரின் மேம்பாட்டுக்காக இருக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி வலியுறுத்தினார். மருத்துவப் படிப்பு முடித்துள்ள உங்களிடம் நானும் அதே வேண்டுகோளை விடுக்கிறேன்.

எதை செய்வது என்று நீங்கள் குழப்பம் அடைந்தால், ஒரு நிமிடம் ஏழைகளை நினைத்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் அவர்களின் பங்கு ஏதாவது இருக்கலாம். அவர் களை நினைக்கும்போது தெளி வான முடிவை நீங்கள் எடுப்பீர்கள்.

9/11 என்றால் உடனே அமெரிக் காவில் இரட்டை கோபுரங்களை தீவிரவாதிகள் தாக்கிய தினம் நினைவுக்கு வரும். மகாத்மா காந்தி, விவேகானந்தர் ஆகியோரின் கருத்துகளைப் பின்பற்றி இருந் தால், அதுபோல் தாக்குதல் நடந் திருக்காது.

இந்த நாளில்தான் ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப் பட்டனர். கொல்வது எளிது. எனவே, உயிரை காப்பாற்ற வாழ்நாள் முழு வதும் தியாக மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும். உங்கள் வாழ்க்கையிலும் 9/11 மிக முக்கிய மான நாளாக மறக்க முடியாத நாளாக இருக்கட்டும். இவ்வாறு மோடி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in