Published : 28 Aug 2020 04:46 PM
Last Updated : 28 Aug 2020 04:46 PM

நாடுமுழுவதும் கோவிட் பரிசோதனை; 4  கோடி எண்ணிக்கையை நெருங்குகிறது

புதுடெல்லி

கோவிட் பரிசோதனைகளின் எண்ணிக்கை நான்கு கோடியை நெருங்குகிறது. கடந்த இரண்டு வாரங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மத்திய அரசு, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின், ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாக தீவிரப் பரிசோதனைகள் மற்றும் மேம்பட்ட மருத்துவ சிகிச்சையில் கவனம் செலுத்தியதால், இந்தியா இரண்டாவது நாளாக ஒரே நாளில் ஒன்பது லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது. இந்தியா ஏற்கெனவே, நாள் ஒன்றுக்கு 10 லட்சம் சோதனைகள் செய்யும் திறனைப் பெற்றுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,01,338 மாதிரிகளை பரிசோதித்துள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வரும் கொவிட்-19 பரிசோதனைகளின் எண்ணிக்கை நான்கு கோடியை நெருங்குகிறது. இன்றைய நிலவரப்படி பரிசோதனைகளின் எண்ணிக்கை 3,94,77,848 ஆகும். கடந்த இரண்டு வாரங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான கோவிட்-19 தொற்று மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இந்தியா கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து நாள் ஒன்றுக்கு ஒன்பது லட்சம் மாதிரிகளை பரிசோதித்துள்ளது

பத்து லட்சம் பேருக்கு 28,607 சோதனைகள் என்ற விகிதத்தில் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பரிசோதனை ஆய்வுக்கூட வசதிகள் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு நாட்டில் மொத்தமுள்ள பரிசோதனை ஆய்வுக் கூடங்களின்

எண்ணிக்கை 1564. இவற்றுள் 998 அரசு ஆய்வு கூடங்கள். 566 தனியார் ஆய்வுக்கூடங்கள். விவரங்கள் பின் வருமாறு:

ரியல் டைம் ஆர் டி பி சி ஆர் அடிப்படையிலான பரிசோதனை ஆய்வுக்கூடங்கள் 801 (அரசு 461 தனியார் 340)

ட்ரூ நாட் அடிப்படையிலான பரிசோதனை ஆய்வுக்கூடங்கள் 643 (அரசு 503 தனியார் 140)

சி பி என் ஏ ஏ டி அடிப்படையிலான பரிசோதனை ஆய்வுக் கூடங்கள் 120 (அரசு 34 தனியார் 86)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x