

ஜன் தன் திட்டம் தொடங்கி 6 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து பிரதமர் நரேந்திர மோடி இது வறுமை ஒழிப்பின் அடித்தளம் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசின் மிக முக்கியமான இந்தத் திட்டத்தின் கீழ் ஏழை மக்கள் மைய நீரோட்ட பொருளாதாரத்தில் தங்கள் வங்கிக் கணக்கைத் தொடங்கி இணைந்தனர்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியின் ட்வீட் வருமாறு:
“இன்றைய தினம், 6 ஆண்டுகளுகு முன்பாக பிரதமர் ஜந்த யோஜனா அறிமுகம் செய்யப்பட்டது, இதன் மூலம் வங்கிக் கணக்கில்லாதோருக்கு வங்கிக் கணக்குள் தொடங்கும் முயற்சி அறிமுகம் செய்யப்பட்டது. இது பொருளாதாரத்தின் போக்கை மாற்றக்கூடிய முயற்சியாகியுள்ளது. பல வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு அடித்தளமான திட்டமானது. கோடிக்கணக்கான மக்கள் இதனால் பயனடைந்துள்ளனர்.
பல குடும்பங்களின் எதிர்காலம் பாதுகாப்பாகியுள்ளது, ப்பிரதமர் ஜன் தன் யோஜனாவுக்கு நன்றி. இதில் கிராமப்புறம் மற்றும் குறிப்பாக பெண்கள் அதிக விகிதத்தில் பயனடைந்துள்ளனர். பிரதமர் ஜன் தன் யோஜனாவுகாக ஓய்வின்றி உழைத்த அனைவருக்காகவும் நான் கரகோஷம் செய்கிறேன்.
இவ்வாறு தன் ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, பகிர்ந்த வரைபடத்தில் இதுவரை ஜன் தன் வங்கிக் கணக்கில் 40 கோடி மக்கள் வங்கிக் கணக்குத் தொடங்கியிருப்பதாக காட்டியது, இதில் 63% கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள், 55% பெண்கள் ஆவார்கள் என்று அந்த வரைபடத்தில் காட்டுகிறது.