‘யுபிஎஸ்சி ஜிஹாத்’ என பிரச்சாரம்: சுதர்ஷன் செய்தி சேனலுக்கு எதிராக நடவடிக்கை கோரும் ஜாமியா மிலியா

ஜாமியா பல்கலை. | கோப்புப் படம்.
ஜாமியா பல்கலை. | கோப்புப் படம்.
Updated on
1 min read

சுதர்ஷன் செய்தி சேனல், தங்கள் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழகம் மீது அவதூறு பரப்பும் விதமாகத் தவறான, வெறுப்புச் செய்திகளை ஒளிபரப்பி வருவதாகக் குற்றம்சாட்டி அந்தச் சேனல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த சேனலின் தலைமை எடிட்டர் மீது நடவடிக்கை தேவை எனவும் வலியுறுத்தி மத்திய கல்வி அமைச்சகத்துக்கு எழுதியுள்ளது.

சுதர்ஷன் செய்தி சேனலின் எடிட்டர் சுரேஷ் சவாங்கே, தனது செய்தியை ‘யுபிஎஸ்சி-யில் முஸ்லிம்களின் ஊடுருவல்’ என்பதை அம்பலப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு ‘யுபிஎஸ்சி ஜிஹாத்’ என்ற ஹேஷ்டேக்குடன் அவதூறு பரப்பி வருவதாக ஜாமியா இஸ்லாமியா பல்கலைக் கழகம் புகார் எழுப்பியுள்ளது.

அவர் தன் வீடியோ செய்தியில் ஜாமியா பல்கலைக் கழகத்தின் ரெசிடென்ஷியல் கோச்சிங் அகாடமியிலிருந்து யுபிஎஸ்சி தேர்வில் பாஸ் செய்து வருபவர்களை ’ஜாமியா கே ஜிஹாதி’ என்று வருணிக்கிறார்.

சுதர்ஷன் சேனலின் இத்தையப் போக்கை ஐபிஎஸ் கூட்டமைப்பு, “பொறுப்பற்றது’ என்று வர்ணித்துள்ளது. சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி பாஸ் செய்பவர்களை மத அடிப்படையில் விஷப்பிரச்சாரம் செய்கிறது, இந்த பொறுப்பற்ற, மத ஆதிக்கப் பிரச்சாரத்தை கடுமையாகக் கண்டிக்கிறோம் என்று அந்த அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

‘எங்கள் ஆர்சிஏ அகாடமியிலிருந்து யுபிஎஸ்சி தேர்ச்சி பெற்றவர்களில் வேலைக்குத் தேர்வு செய்யப்பட்ட 30 பேரில் 16 முஸ்லிம்கள் 14 இந்துக்கள். எனவே சுதர்ஷன் சேனல் போன்றவற்றுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை’ என்று ஜாமியா துணை வேந்தர் நஜ்மா அக்தர் ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றில் தெரிவித்தார்.

சுதர்ஷன் சேனலின் எடிட்டர் சவாங்கே இது பற்றி ஆங்கில ஊடகம் ஒன்றில் கூறும்போது, “ஆர்சிஏ அகாடமியில் இந்துக்களும் படிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. ஜிஹாதி என்ற வார்த்தையை எதிர்ப்பவர்கள் அது என்ன அவதூறு சொல்லா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். சிவில் சர்வீஸஸில் அவர்கள் எண்ணிக்கை எப்படி அதிகமாகிறது. ஏனெனில் உருது மொழி மற்றும் இஸ்லாமிய ஆய்வு என்று அவர்களுக்கு கொல்லப்புற சாதக வழி அமைத்துக் கொடுக்கப்படுகிறது. என்னுடைய ஷோ சட்ட விரோதம் என்றாலோ, ஒலிபரப்பு தரமற்றது என்றோ தெரிந்தால் என் மீது நடவடிக்கை எடுக்கட்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in