மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், மகாராஷ்டிராவில் மிக கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், மகாராஷ்டிராவில் மிக கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Updated on
1 min read

மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர் மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தின் விதர்பா பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

நன்கு தெளிவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தென்மேற்கு ஜார்கண்ட் மற்றும் சுற்றுப்புறப்பகுதியில் நிலைகொண்டுள்ளது. அடுத்த 3 நாட்களில் இது வடக்கு சத்தீஸ்கர், வடக்கு மத்தியப் பிரதேசம் மற்றும் தெற்கு உத்தரப்பிரதேசம் வழியாக மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக பலவீனமடைய வாய்ப்புள்ளது.

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் மேற்கு முனை இமயமலை அடிவாரத்திற்கு அருகில் ஓடுகிறது. மற்றும் கிழக்கு முனை அதன் இயல்பான நிலைக்கு தெற்கே ஓடுகிறது. மேற்கு முனை நாளை முதல் தெற்கு நோக்கி நகர்ந்து அதன் இயல்பான நிலையில் தொடர்ந்து 2 நாட்கள் நிலைகொண்டிருக்கும், பின்னர் வடக்கு நோக்கி நகர்ந்து இமயமலையின் அடிவாரத்திற்கு அடுத்தடுத்து 4-5 நாட்களுக்கு நகரும்.

கூடுதலாக, அரபிக் கடலில் இருந்து வலுவான தாழ்வு நிலையில் தென்மேற்கு காற்று மற்றும் வங்காள விரிகுடாவிலிருந்து கிழக்காக வீசும் காற்று, வடமேற்கு இந்தியாவின் சமவெளிகளில் நாளை முதல் அடுத்த 2 நாட்களுக்கு அதிகமாக இருக்கும்.

இவற்றின் விளைவால், கிழக்கு மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், விதர்பா ஆகியவற்றில் பரவலான மழையுடன், விட்டுவிட்டு மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in