மொகரம் ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை: உச்சநீதிமன்றம் மறுப்பு

மொகரம் ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை: உச்சநீதிமன்றம் மறுப்பு
Updated on
1 min read

கரோனா பரவல் சூழலில் நாடுமுழுவதும் மொகரம் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக மிகப்பெரிய அளவிலான பண்டிகை மற்றும் ஊர்வலத்திற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. அதனடிப்படையில் பெரும்பாலான மாநிலங்களில் விநாயகர் ஊர்வலம் உட்பட பல்வேறு மத ஊர்வலங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.

இந்தநிலையில் வரும் சனிக்கிழமையன்று மொகரம் பண்டிகை வருகிறது. இதையடுத்து உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சையத் கல்பே ஜவாத், பூரி ஜகநாத் ஆலயத் தேரோட்டத்திற்கு அனுமதியளித்ததைச் சுட்டிக்காட்டி, நாடு முழுவதும் மொகரம் ஊர்வலத்திற்கு அனுமதியளிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீது உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளதாவது:

‘‘தேரோட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட கோயிலில் ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தில், இடத்தில் நடைபெறும் நிகழ்வு. அவ்வாறான நிலையில், ஆபத்தை மதிப்பிட்டு அனுமதியளிக்கலாம். ஆனால் நாடுமுழுவதும் மொகரம் ஊர்வலத்திற்கு நாடு முழுவதுக்கும் பொதுவான உத்தரவு பிறப்பித்து அனுமதி வழங்கினால் அது குழப்பத்தை ஏற்படுத்தும்.

கரோனா வைரஸ் தொற்றை பரப்பியதாக ஒரு குறிப்பிட்ட சமூகம் பற்றி என்கிற கருத்தியலும் குழப்பமும் உருவாக்கப்படும். மக்களின் உடல்நலத்திற்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால், நாங்கள் உத்தரவு பிறப்பிக்க முடியாது’’ என்று தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in