இணையதளம் தொடங்கினார் அமித் ஷா

இணையதளம் தொடங்கினார் அமித் ஷா
Updated on
1 min read

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் இணையதளப் பக்கத்தை அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ராம்லால் தொடங்கி வைத்தார்.

கட்சித் தொண்டர்கள் மற்றும் நாட்டு மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்க >www.amitshah.co.in என்ற இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

இதற்கான நிகழ்ச்சியின்போது பேசிய அமித் ஷா, "பொதுவாக நான் ஊடகத் தொடர்பு இல்லாமல் இருப்பதாக குறை சொல்கிறார்கள். ஆனால் அதனை நான் ஏற்க மாட்டேன். அதனால் மக்களுடனும் தொண்டர்களுடனும் எளிமையான முறையில் தொடர்பில் இருக்க இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளேன்.

எனது செயல்பாடுகள், தொண்டர்களுக்கான அறிவிப்புகள், கட்சியின் செயல்பாடுகள், அரசுத் திட்டங்கள் ஆகியவற்றை இந்த இணையதளத்தில் அறிமுகப்படுத்தப்படும். அனைவரும் இதன் மூலம் அனைவரும் என்னுடன் நேரடித் தொடர்பில் இருக்கலாம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in