Last Updated : 14 Sep, 2015 06:19 PM

 

Published : 14 Sep 2015 06:19 PM
Last Updated : 14 Sep 2015 06:19 PM

தனியார் ஆலைகளிடம் ரூ.5,200 கோடி நிலுவையையும் மீறி உ.பி.யில் கரும்புக்கான புதிய அறவை பருவம் அறிவிப்பு



கரும்பு நிலுவைத் தொகை ரூ.5,200 கோடிக்கு மேல் தனியார் சர்க்கரை ஆலைகளால் கொடுக்கப்படாத நிலையில், உத்தரப் பிரதேச மாநில சமாஜ்வாதி கட்சி அரசு இன்று முதல் புதிய அறவை பருவத்தை அறிவித்து ஆலைகள் தயாரிப்புகளை மேற்கொள்ளக் கூறியுள்ளது.

நாட்டிலேயே மிக அதிகமாக சர்க்கரை உற்பத்தி செய்யப்படும் மாநிலம் உத்தரப் பிரதேசம். இங்கு, புதிய கரும்புப் பருவம் அக்டோபர் 1 அன்று தொடங்க, அறவைப் பருவம் நவம்பர் 15 அன்று தொடங்குகிறது. இங்குள்ள உள்ள 123 சர்க்கரை ஆலைகளில் பெரும்பாலனவை தனியார் ஆலைகளாகும். இவற்றுக்குத் தேவையான கரும்பு பகுதிகளை மாநில கரும்பு வளர்ச்சித் துறை ஒதுக்கீடு செய்யத் தொடங்கியுள்ளது. ஆனால் தங்களது பிரச்சனைகளுக்கு அரசு தீர்வு காணாதவரை கூட்டத்தில் கலந்துகொள்வதில்லை என்று பெரும்பாலான தனியார் ஆலைகள் தெரிவித்துள்ளன.

இது குறித்து அம்மாநில மாநில கரும்பு ஆணையர் அஜய் குமார் சிங் அறிக்கையில், "மாநில அரசு இயன்ற அளவு நிவாரணம் வழங்கியுள்ளது. இனிமேல் தனியார் ஆலைகள் செயல்படத் தொடங்கவேண்டும். இதற்கானக் கூட்டங்களில் அவர்கள் கலந்து கொள்ளாவிட்டால், அரசு அவர்களுக்கானப் பகுதிகளை வேறு எவருக்கும் ஒதுக்கீடு செய்துவிடும்" எனத் தெரிவித்துள்ளார்.-

நிதிச் சிக்கலில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு உ.பி. அரசு ரூ.2,000 கோடி நிதி அளித்துள்ளது. மத்திய அரசிடமிருந்தும் ரூ.1000 கோடி கிடைக்கும் என்று மாநில சர்க்கரைத் தொழில் அதிபர்கள் எதிர்பார்க்கின்றனர். இவ்வளவு நிவாரண உதவி கிடைத்தும் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு

வருவதாகவும் தங்களால் மத்திய அரசு நிர்ணயித்துள்ள விலையான குவிண்டாலுக்கு ரூ.230 கொடுக்க முடியாது என்றும், தனியார் ஆலைகள் கூறுகின்றனர். 2014-15 அறவைப் பருவத்திற்கு உ.பி.அரசு மானில ஆதார விலையாக குவிண்டாலுக்கு ரூ.280 அறிவித்து ஆலைகள் ரூ 240ஐ உடனடியாகவும் ரூ 40ஐ பின்னரும் அளிக்கக் கூறியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x