Published : 03 Sep 2015 08:16 AM
Last Updated : 03 Sep 2015 08:16 AM

இந்து மதம் என்பது வேறு, இந்துத்துவம் என்பது வேறு: பிரபல வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர் ‘ஃபிரண்ட்லைன்’ இதழுக்கு பேட்டி

இந்து மதம் என்பது வேறு இந்துத்துவம் என்பது வேறு என்று சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்திய வரலாற்றாசிரியரான பேராசிரியர் ரொமிலா தாப்பர், தற்போது கடைகளுக்கு வந் துள்ள ‘ஃபிரண்ட்லைன்’ இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி யுள்ளார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக கவுரவ பேராசிரியரான ரொமிலா தாப்பர், முற்கால இந்திய வரலாற்று ஆய்வுகளில் முக்கியப் பங்காற்றியவர். இந்திய வரலாற்றில் இந்துத்துவம் என்பது எந்த வகையில் கையாளப்பட்டது என்பதை தனது ஆய்வுகள் மூலம் கண்டறிந்தவர் ரொமிலா தாப்பர். இந்திய சமூக, பொருளாதார வரலாறு குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டு புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

அவர் பேட்டியில் கூறியுள்ளதன் ஒருபகுதி: முற்கால இந்திய வரலாற்றில் இந்துத்துவம் என்பது வலுவான சமூக அறிவியல் சார்ந்த தாக இருந்தது. ஆனால் சமீப காலத்தில் அது தொடர்பாக ஏற் பட்டுள்ள மாற்றங்கள் கவனிக் கப்பட வேண்டியது. மதம் சார்ந்த தேசியவாதம் என்பது ஒரு மதம், கலாச்சாரம், மொழி என்று அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தப்படுகிறது.

எனவே இந்து மதம் என்பது வேறு இந்துத்துவம் என்பது வேறு. இந்து மதம் என்பது நாட்டில் பெருவாரியான மக்களால் கடைப்பிடிக்கப்படும் மதம் மட்டுமே. ஆனால் இந்துத்துவம் என்பது ஓர் அரசியல் ஆதரவை அதிகரித்துக் கொள்ளும் முயற்சியாக உள்ளது.

இந்து மதத்தில் இருந்து சில விஷயங்களை மட்டும் எடுத்து இந்துத்துவம் என்ற புதிய கருத்தாக்கத்தை சிலர் உருவாக்கியுள்ளனர். இது இந்து மதத்தில் இருந்து பல்வேறு வகையில் வேறுபட்டதாக உள்ளது. இந்துத்துவம் என்பது 20-ம் நூற்றாண்டில் அரசியல் ஆதாய நோக்குடன் இந்துக்களை இந்து ராஜ்ஜியத்தை நோக்கி வழிநடத்துவோம் என்று உருவாக்கப்பட்டது. தங்களுக்கு எப்படி வசதிப்படுமோ அதன்படி இந்துத்துவத்தை வடிவமைத்துள்ளன என்று தனது பேட்டியில் ரொமிலா தாப்பர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x