முஹர்ரம் ஊர்வலத்தில் இந்திய எதிர்ப்பு விடுதலை முழக்கங்கள்: காஷ்மீரில் பலர் மீது வழக்கு - போலீஸார் அதிரடி

முஹர்ரம் ஊர்வலத்தில் இந்திய எதிர்ப்பு விடுதலை முழக்கங்கள்: காஷ்மீரில் பலர் மீது வழக்கு - போலீஸார் அதிரடி
Updated on
1 min read

காஷ்மீர், ஸ்ரீநகரில் முஹர்ரம் ஊர்வலத்தில் விடுதலை மற்றும் இந்திய-எதிர்ப்பு முழக்கங்கள் எழுப்பியதையடுத்து போலீஸார் பலர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த முழக்கங்கள் குறித்து சமூகவலைத்தளங்களில் பரவியதையடுத்து ஜம்மு காஷ்மீர், பரிம்போரா போலீஸார் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, “போலீஸார் சுறுசுறுப்பாக செயல்பட்டு ஸ்ரீநகருக்கு அருகே இந்த கோஷங்கள், ஊர்வலம் நடந்த இடத்தைக் கண்டுப்பிடித்து நடவடிக்கை மேற்கொண்டனர், இங்கு இதற்கு முன்னதாக சட்டவிரோதமாக யாரும் கூடி கோஷங்களோ, போராட்டங்களோ நடத்தியதில்லை” என்றார்.

இதனைத் தொடர்ந்து நள்ளிரவில் மேற்கொண்ட ரெய்டில் 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் கைதுகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் மீது பல பிரிவுகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1990களிலேயே சில இடங்களில் நினைவு கூர்தல் ஊர்வலங்களுக்கு அங்கு தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in