

இந்தியாவில் கோவிட் பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், கடுமையாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் மீண்டவர்களுடனான எண்ணிக்கை வித்தியாசம் அதிகரிக்கிறது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
கரோனாவில் இருந்து மீண்டு வந்த நோயாளிகள், கடுமையாக பாதிக்கப்பட்டவர்களைக் காட்டிலும், 3.5 மடங்கு அதிகமாகும்
இந்தியாவில் இன்று மீட்டெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, கடுமையாக பாதிக்கப்பட்டவர்களைவிட, கூடுதலாகி, 3.5 மடங்காக உள்ளது.
கடந்த பல நாட்களுக்கு பிறகு, ஒரே நாளில் குணமடைந்தவர்களின் எண்ணிகை 60,000-க்கும் அதிகமாக உள்ளது. கோவிட்-19 நோயாளிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 63,173 பேர் குணமடைந்திருப்பது, ஒட்டுமொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கையை 24,67,758 பேர்களாக உயர்த்தியுள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கைக்கும்,, கடுமையாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கும், இடையிலான வேறுபாடு வேகமாக அதிகரிப்பதற்கு இது வழிவகுத்துள்ளது.
மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களைக் (7,07,267) காட்டிலும், 17,60,489 பேர் குணமடைந்துள்ளனர். இத்துடன் கோவிட்-19 நோயாளிகளில் மீட்பு விகிதம் 76 சதவீதத்தைத் (76.30) தாண்டியுள்ளது.
குணமடைந்து வருபவர்கள் அதிகமான எண்ணிகையில் பதிவாகி இருப்பது, நாட்டில் உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அதாவது மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மேலும் குறைந்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கையில், 21.87 சதவிகிதத்தை மட்டுமே தற்போது இது உள்ளடக்கியுள்ளது.
மத்திய மற்றும் மாநில / யூனியன் பிரதேச அரசுகளின், ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாக தீவிரப் பரிசோதனைகள் மற்றும் திறமையான மருத்துவ மேலாண்மை மூலம், மருத்துவமனைகளில் நோயாளிகளைக் கொண்டு சேர்த்து, நோய்த் தொற்று முன்கூட்டியே கண்டறியப்பட்டதால் இறப்பு விகிதம் தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. இன்றைய தேதியில் இறப்பு விகிதம் சீராக குறைந்து 1.84 சதவிகிதமாக உள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.