Last Updated : 13 Sep, 2015 05:22 PM

 

Published : 13 Sep 2015 05:22 PM
Last Updated : 13 Sep 2015 05:22 PM

ரூ.4.65 லட்சம் பறிமுதல்: பிஹார் முன்னாள் முதல்வர் மாஞ்சி மகன் கைது

பிஹாரில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி யின் மகன் பிரவீன் குமார் தனது காரில் ரூ. 4.65 லட்சம் ரொக்கம் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார்.

பிஹார் சட்டப் பேரவைத் தேர்தல் அக்டோபர் 12-ல் தொடங்கி 5 கட்டங்களாக நடத் தப்படுகிறது. வாக்கு எண் ணிக்கை நவம்பர் 8-ல் நடை பெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து மாநிலம் முழுவதும் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள் ளன.

தேர்தல் பிரச்சாரத்தில் கருப்பு பணம் பயன்படுத்தப் படுவதை தடுக்க மாநில போலீ ஸாரும் வருமான வரி அதி காரிகளும் தீவிர சோதனை யில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கயாவில் இருந்து பாட்னாவுக்கு நேற்று காரில் சென்று கொண்டிருந்த ஜிதன்ராம் மாஞ்சியின் மகன் பிரவீன் குமாரின் வாகனத்தை ஜெகானாபாத் மாவட்டம் மக் தம்பூர் சோதனைச் சாவடியில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். அவரிடம் சோதனை நடத்தி யதில் ரூ. 4.65 லட்சம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது.

அந்தப் பணத்துக்கு முறை யான ஆவணங்களை அவர் சமர்ப்பிக்கவில்லை, அவர் அளித்த பதிலும் திருப்திகர மாக இல்லை. எனவே போலீ ஸார் அவரை கைது செய்து மக்தம்பூர் போலீஸ் நிலையத் துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று மூத்த போலீஸ் அதிகாரி முகம்மது அஷ்பக் அன்சாரி தெரிவித்தார்.

பிரவீன் குமார் விளக்கம்

பிரவீன் குமார் போலீ ஸில் அளித்துள்ள வாக்கு மூலத்தில், பாட்னாவின் ஹனு மன்நகரில் உள்ள எங்களது வீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற் காக எனது சகோதரர்களிடம் இருந்து பணத்தை பெற்று வீட்டுக்கு கொண்டு சென்றேன் என்று தெரிவித்துள்ளார்.

பிரவீன் குமார் கூறிய விளக்கம் குறித்து விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் தவறான தகவல் அளித்திருப்பது தெரியவந் தால் அந்த பணத்தை வரு மான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வார்கள் என்று தேர்தல் ஆணைய வட் டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிஹாரில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் ஒருவர் அதிகபட்சமாக ரூ. 50 ஆயிரம் வரை மட்டுமே ரொக்கமாக கொண்டு செல்ல லாம். அதற்கு அதிகமான தொகையை கையில் எடுத்துச் சென்றால் உரிய காரணத்தை ஆதாரங்களுடன் தெரிவிக்க வேண்டும்.

முதல்வர் பதவி விவகாரத் தில் நிதிஷ்குமாருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து விலகிய ஜிதன்ராம் மாஞ்சி, இந்துஸ் தான் அவாமி மோர்ச்சா என்ற ளாஇந்த கட்சி பாஜக தலை மையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற் றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x