Published : 26 Aug 2020 07:50 AM
Last Updated : 26 Aug 2020 07:50 AM

5 முதல் 17 வயதுக்குட்பட்டோருக்கு கரோனா அதிகம் பரவி வருகிறது: டெல்லி ஆய்வில் தகவல்

புதுடெல்லி

டெல்லியில் 5 முதல் 17 வயதுக்குட்பட்டோருக்கு கரோனா வைரஸ்அதிக அளவில் பரவி வருவதாக ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

டெல்லியில் கடந்த 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரையில் அனைத்து வயதையும் உள்ளடக்கிய 15 ஆயிரம் பேரிடம் ஒருஆய்வு (சீராலஜிகல்) நடத்தப்பட்டது. இதில் 25 சதவீதம் பேர் 18வயதுக்குட்பட்டோர். 18 முதல் 50 வயதுக்குட்பட்டோர் 50 சதவீதம். மற்றவர்கள் 50 வயதுக்கு மேற்பட்டோர். இந்த ஆய்வின்படி,அதிகபட்சமாக 5 முதல் 17வயதுக்குட்பட்டோரில் 34.7 சதவீதம் பேருக்கு கரோனா வைரஸ்பரவி வருவது தெரியவந்துள்ளது. 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் 31.2 சதவீதம் பேர் கரோனா வைரஸிலிருந்து மீண்டுள்ளனர். 18 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களில் 28.5 சதவீதம் பேரிடம் கரோனா வைரஸை எதிர்க்கும் செல்கள் (ஆன்டிபாடிஸ்) உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது.

ஒட்டுமொத்த டெல்லி மக்கள் தொகையில் 29.1 சதவீதம் பேருக்கு கரோனா வைரஸ் எதிர்ப்பு செல்கள் உருவாகி உள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி வரையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 61.31 சதவீதம் பேர் 21 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவிக்கிறது.

தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர்கள் மற்றும் வீட்டு வேலைக்காரர்களிடமிருந்து குழந்தைகளுக்கு கரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கரோனா வைரஸை கட்டுப்படுத்த டெல்லி அரசு அமைத்த குழுவின் தலைவர் டாக்டர் மகேஷ்வர்மா கூறும்போது, “குழந்தைகள், இளைஞர்களை வீட்டுக்குள்முடக்கி வைப்பது கடினம். அவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை என்றாலும் விளையாடுவதற்காக வெளியில் செல்கிறார்கள். இதனால் அவர்களுக்கு வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x