Published : 26 Aug 2020 06:41 AM
Last Updated : 26 Aug 2020 06:41 AM

கரோனா தடுப்பூசி ஆராய்ச்சி, உற்பத்திக்காக ரூ.3,000 கோடியில் கோவிட் சுரக்சா திட்டம்

கரோனா தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் உற்பத்திக்காக ரூ.3,000 கோடியில் 'கோவிட் சுரக்சா திட் டத்தை' செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாடுமுழுவதும் கரோனா வால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31 லட்சத்து 67,323 ஆக உயர்ந்துள்ளது. 7 லட்சத்து 4,348 பேர் சிகிச் சையில் உள்ளனர். இந்நிலை யில் கரோனா தடுப்பூசி கண் டறியும் பணி தீவிரப்படுத்தப் பட்டு பல கட்டங்களை எட்டியுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை களுக்கு நிதி திரட்ட கடந்த மார்ச் 28-ம் தேதி 'பி.எம். கேர்ஸ் நிதி' உருவாக்கப்பட்டது. இந்த நிதி மூலம் நாடு முழுவதும் பல்வேறு கரோனா தடுப்பு திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகின்றன.

இதைத் தொடர்ந்து கரோனா தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் உற்பத்திக்காக ரூ.3,000 கோடியில் 'கோவிட் சுரக்சா திட்டம்' என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

இந்தியாவில் சுமார் 30 கரோனா தடுப்பூசிகள் பல் வேறு கட்ட பரிசோதனைகளில் உள்ளன. இதில் பாரத் பயோடெக், ஐசிஎம்ஆர் இணைந்து உருவாக்கிய கோவேக்ஸின் தடுப்பூசி, ஜைடஸ் கேடில்லா மருந்து நிறுவனம் தயாரித்துள்ள ஜைகோவ்-டி தடுப்பூசி ஆகி யவை குறிப்பிடத்தக்க முன் னேற்றங்களை அடைந் துள்ளன.

6 தடுப்பூசிகள்

கரோனா தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் உற்பத்திக் காக 'கோவிட் சுரக்சா திட் டத்தை" செயல்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் குறைந்தபட்சம் 6 தடுப்பூசிகளை சந்தையில் விரைவாக அறிமுகம் செய்ய முன்னுரிமை அளிக்கப்படும். 12 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு தோராயமாக ரூ.3,000 கோடி நிதி ஒதுக்கப்படும்.

இந்த திட்டத்தின் மூலம் மக்களுக்கு கரோனா தடுப் பூசி விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 12 முதல் 15 மாதங் களுக்குள் கரோனா தடுப்பூசி தராளமாகக் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

இவ்வாறு அரசு வட்டாரங் கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x