Last Updated : 25 Aug, 2020 06:50 AM

 

Published : 25 Aug 2020 06:50 AM
Last Updated : 25 Aug 2020 06:50 AM

முதல் மாநிலமாக கர்நாடகாவில் புதிய கல்விக் கொள்கை அமலாகும்: துணை முதல்வர் அஷ்வத் நாராயண் தகவல்

பெங்களூரு பல்கலைக்கழகம் ’புதிய கல்வி கொள்கையின் முக்கியத்துவமும், அமல்படுத்த வேண்டியதன் அவசியமும்’ என்ற தலைப்பில் 5 நாள் இணைய வழி கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த கருத்தரங்கை துணை முதல்வரும், உயர்கல்வி துறையை நிர்வகிப்பவருமான அஷ்வத் நாராயண் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அஷ்வத் நாராயண் பேசியதாவது:

புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதில் கர்நாடக அரசு தெளிவான இலக்கு மற்றும் உறுதியான கொள்கையை கொண்டுள்ளது. நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் புதிய கல்விக் கொள்கையை கர்நாடக அரசு வரவேற்கிறது. எனவே நாட்டில் முதல் மாநிலமாக கர்நாடகா புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த இருக்கிறது.

புதிய கல்வி கொள்கையை ஆராய்ந்து செயல்படுத்துவதற்காக கல்வியாளர்களைக் கொண்டு ’புதிய கல்வி கொள்கை பணி குழு’ அமைத்துள்ளது.

இந்த குழு பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியுள்ளது. இந்த பரிந்துரைகளைக் கொண்டு விரிவான திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கும் பணிகளும் நடந்து வருகிறது.

தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள விரிவான திட்ட வரைவு அறிக்கையை விரைவில் உறுதி செய்யப்படும். அதன் பின் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதற்கான நிர்வாக மற்றும் சட்ட ரீதியான பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அஷ்வத் நாராயண் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x