பத்மநாபசுவாமி கோயில் 26-ம் தேதி வழிபாட்டுக்கு திறப்பு

பத்மநாப சுவாமி கோயில் கோபுரத்தைப் பார்த்து கும்பிடும் மூதாட்டி.
பத்மநாப சுவாமி கோயில் கோபுரத்தைப் பார்த்து கும்பிடும் மூதாட்டி.
Updated on
1 min read

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கேரளாவின் முக்கிய வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதால் வரும் 26-ம் தேதி பக்தர்களின் வழிபாட்டுக்காக திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் திறக்கப்பட உள்ளது.

இதுகுறித்து கோயிலின் செயல் அதிகாரி வி.ரதீஷன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஒரு நாளுக்கு முன்பாகவே கோயிலின் http://spst.in/ இணையதளத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும்.

அந்த ஆவணத்தையும் அசல் ஆதார் அட்டையும் கோயிலுக்கு எடுத்து வர வேண்டும். பக்தர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். சோப்பு அல்லது சானிடைசரால் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். சமூக இடைவெளியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

காலை 8 மணி முதல் 11 மணி வரையும் மாலை 5 மணி முதல் 6.45 மணி வரை மட்டுமே கோயில் திறந்திருக்கும். ஒரு நேரத்தில் 35 பக்தர்கள் மட்டுமே சன்னதிக்குள் அனுமதிக்கப்படுவார்கள். நாளொன்றுக்கு 665 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். இவ்வாறு ரதீஷன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in