

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றமில்லை எனவும் அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி (84), கடந்த 10-ம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டிருப்பது தெரியவந்ததை தொடர்ந்து, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு கரோனா தொற்று இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு நுரையீரல் தொற்று தீவிரம் ஆனதாகவும் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
செயற்கை சுவாசம்
இந்நிலையில் ராணுவ மருத்துவமனை நேற்று வெளியிட்ட செய்தியில், “பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் மாற்றமில்லை. அவருக்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை. அவர் தொடர்ந்து கோமாவில் இருந்து வருகிறார்.
அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது" எனக் கூறப்பட்டுள்ளது.