

மத்தியப் பிரதேச காங்கிரஸ் ஆட்சி கவிழக்காரணமே முதல்வராக இருந்த கமல் நாத் மற்றவர்களுக்கு பதவிகளைப் பிரித்துக் கொடுக்காமல் தானே முக்கியப் பதவிகளைத் தக்கவைத்ததுதான் என்று தற்போதைய பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கடுமையாக கிண்டலாக பேசியுள்ளார்.
“பாஜகவில் கட்சித் தலைவர் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறுவார்கள். காங்கிரஸ் கட்சியை எடுத்துக் கொண்டால் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி இப்படி...
மத்தியப் பிரதேசத்தை எடுத்து கொண்டால் மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், முதல்வர் கமல்நாத், எதிர்கட்சித்தலைவர் கமல்நாத், இளைஞர் தலைவர் நகுல் நாத். காங்கிரஸ் கட்சியில் மீதியுள்ளவர்கள் அநாத் (அதாவது அநாதைகள்).
ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை ஆதரித்து ஆயிரகணக்கான தொண்டர்கள் பின்னால் வந்துள்ளனர். காங்கிரஸாரால் பாதிக்கப்பட்ட சம்பல் பகுதியின் பெருமை மீட்டெடுக்கப்படும்.
பாஜகவில் பல புதிய நண்பர்கள் உறுப்பினர்களாக சேர்கின்றனர்.. இதற்கு ஜோதிர் ஆதித்ய சிந்தியாதான் காரணம்” என்றார் ம.பி.முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்.