இளம்பெண்களை ஆபாசமாக படமெடுத்த ஏடிஜிபி: 24 மணி நேரத்தில் அதிரடி நீக்கம்

இளம்பெண்களை ஆபாசமாக படமெடுத்த ஏடிஜிபி: 24 மணி நேரத்தில் அதிரடி நீக்கம்
Updated on
1 min read

காபி ஷாப்பில் இளம்பெண்களை ஆபாசமாக படமெடுத்த பெங்க ளூரை சேர்ந்த ஏடிஜிபி போலீஸ் அதிகாரி ரவீந்திரநாத் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். 24 மணி நேரத்தில் அவர் மீது அதிரடி நடவடிக்கை எடுத்த கர்நாடக அரசுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கடந்த திங்கள்கிழமை ரேணுகா (27), பவித்ரா (30) (இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன) பெங்களூரில் உள்ள கன்னிங்காம் சாலையிலுள்ள காபி ஷாப்பிற்கு வந்துள்ளனர்.

அந்த பெண்களை 50 மதிக்கத் தக்க நபர் செல்போனில் படமெடுத் துள்ளார். இரு பெண்களும் அவருடன் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். காபி ஷாப்பில் இருந்த சிலர் அவரிடமிருந்த செல்போனை பிடுங்கி பார்த்தபோது ஆபாச படமெடுத்தது தெரியவந்தது.

`ஹை கிரவுண்ட்' போலீஸார் அந்த இரு இளம்பெண்களையும் அந்த நபரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்துள்ளனர். அப்போது அந்த நபர், என்னுடைய பெயர் பி.ரவீந்திர நாத். பெங்களூர் ஏடிஜிபி போலீஸ் அதிகாரியாக (பொறுப்பு) இருக் கிறேன் என தன்னுடைய அடை யாள அட்டையை காட்டியுள்ளார்.

இதனிடையே ரவீந்திர நாத் அங்கிருந்து செல்போன் மூலம் மற்றொரு ஏடிஜிபி அதிகாரியான ரவிகர‌ந்த் கவுடாவிற்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக ஹை கிரவுண்ட் காவல் நிலையத் திற்கு வந்த அவர்,'' இவர் ஐபிஎஸ்.அதிகாரிதான்' எனச் சொல்லி வெளியே அழைத்துவந்துள்ளார்.

ஊடகங்கள் கொடுத்த அழுத்தம்

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் கப்பன் பூங்கா போலீஸ் நிலையத்தில் திங்கள்கிழமை புகார் அளித்தனர். கப்பன் பூங்கா போலீஸார் அவர் ஏடிஜிபி அதிகாரி என தெரியாமலே வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே காபி ஷாப் சம்பவம் குறித்து ஊடகங்களில் செய்தி கசிந்தது.

இதுகுறித்து பெங்களூர் மாநகர போலீஸ் கமிஷர் ராகவேந்திர அவ்ராத்கர் விசாரித்ததில், ஏடிஜிபி ரவீந்திரநாத் இளம்பெண்களை ஆபாசமாக படமெடுத்தது தெரிய வந்தது. ரவீந்திர நாத்தை முதலில் விசாரித்த சாதாரண காவலர் அந்த படங்களை 'புளூ டூத்' மூலமாக அவருடைய செல்போனில் இருந்து தன்னுடைய செல்போனுக்கு அனுப்பிக்கொண்ட படங்களை ஆதாரமாக வழங்கினார்.

மாநில போலீஸ் டிஜிபி லால் ருக்மா பச்சாவோ கடுமையாக கண்டித்ததைத் தொடர்ந்து ஏடிஜிபி பி.ரவீந்திரநாத் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை எழுதி கொடுத்துள்ளார். குற்றம் செய்த 24 மணி நேரத்தில் போலீஸ் ஐபிஎஸ் அதிகாரி மீது கடுமையாக நட வடிக்கை எடுக்க காரணமாக இருந்த அரசுக்கு பாதிக்கப்பட்ட பெண்களும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in