கரோனாவால் உயிரிழந்த துப்புரவு பணியாளர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி

கரோனாவால் உயிரிழந்த துப்புரவு பணியாளர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி
Updated on
1 min read

டெல்லியில் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த துப்புரவுப் பணியாளரின் குடும்பத்துக்கு முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று ரூ.1 கோடி இழப்பீடு வழங்கினார்.

டெல்லியில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 4 ஆயிரத்துக் கும் மேற்பட்டோர் உயிரிழந் துள்ளனர். கரோனாவுக்கு எதி ரான போரில் முன்களப் பணி யாற்றி வரும் துப்புரவுப் பணி யாளர்களும் தொற்று பாதிப் புக்கு ஆளாகின்றனர். டெல்லி யில் 30-க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், வடக்கு டெல்லி மஞ்சு-கா-டில்லா பகுதி யில் கரோனா தொற்றால் உயி ரிழந்த துப்புரவுப் பணியாளர் ராஜுவின் வீட்டுக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று சென்றார். ராஜுவின் குடும் பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், ரூ.1 கோடிக்கான காசோ லையை வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in