Published : 21 Aug 2020 04:07 PM
Last Updated : 21 Aug 2020 04:07 PM

கரோனா; சிகிச்சை தேவைப்படுபவர் விகிதம் குறைவு, குணமடைபவர் விகிதம் அதிகரிப்பு

இந்தியாவில் ஒரே நாளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகபட்சத்தைக் கடந்து மற்றுமொரு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 62,282 பேர் குணமடைந்துள்ளனர்

இந்தியாவில், ஒரே நாளில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 62,282 பேர் குணமடைந்துள்ளனர்.

அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் குணமடைந்து, மருத்துவமனயிலிருந்து வீடு திரும்புவதாலும், குறைவான மற்றும் மிதமான தொற்றுப் பாதிப்புள்ளவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாலும், குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து இன்று 21.5 லட்சத்தைக் கடந்துள்ளது (21,58,946). கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கும், மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கும் இடையிலான இடைவெளி இன்று 14,66,918-ஐ எட்டியுள்ளது.

இந்தியாவின் குணமடையும் விகிதமானது, கணிசமாக உயர்ந்து 74 விழுக்காட்டைக் (74.28 சதம்) கடந்துள்ளது. 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குணமடையும் விகிதம் 50 விழுக்காட்டுக்கும் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.

நமது நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் 23.82 சதவிகிதத்தினருக்கு மட்டுமே மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்களின் விகிதம் கடந்த 24 மணி நேரத்தில் வெகுவாக குறைந்துள்ளது. இவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவசர சிகிச்சை வசதி, ஆம்புலன்ஸ் வசதி, ஆக்சிஜன் உதவி போன்ற பல்வேறு வசதிகளால் கொவிட்-19 தொற்றால் ஏற்படும் இறப்பு விகிதம், உலக சராசரியைவிட இந்தியாவில் குறைவாக உள்ளது. இந்த விகிதம் தற்போது 1.89 விழுக்காடு மட்டுமே.

கடந்த 24 மணி நேரத்தில், 8,05,985 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 3,34,67,237 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

தற்போதைய நிலவரப்படி, கொவிட்-19 மாதிரிகள் பரிசோதிக்கப்படும் அரசு ஆய்வகங்கள் 978, தனியார் ஆய்வகங்கள் 526 என மொத்த ஆய்வகங்களின் எண்ணிக்கை 1504 ஆகும். இதன் விவரங்கள்:

· ரியல்-டைம் ஆர்டி பிசிஆர் அடிப்படையிலான சோதனைக்கூடங்கள்: 772 (அரசு: 453 + தனியார்: 319)

· ட்ரூநேட் அடிப்படையிலான சோதனைக் கூடங்கள்: 614 (அரசு: 491 + தனியார்: 123)

· சிபிஎன்ஏஏடி அடிப்படையிலான சோதனைக் கூடங்கள்: 118 (அரசு: 34 + தனியார்: 84)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x