மேற்கு வங்க தலைமை செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மேற்கு வங்க தலைமை செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
Updated on
1 min read

கொல்கத்தாவில் 200 ஆண்டுகள் பழமையான, பாரம்பரிய கட்டிடத் தில் (ரைட்டர்ஸ் பில்டிங்), மேற்கு வங்கத்தின் தலைமைச் செயலகம் செயல்படுகிறது.

இந்தக் கட்டிடத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக காவல் துறை தலைமை அலுவலகத்துக்கு நேற்று பிற்பகல் அனாமதேய இமெயில் வந்தது. இதையடுத்து இந்தக் கட்டிடத்தை சுற்றிலும் போலீஸார் குவிக்கப்பட்டனர். அதிகாரிகள், ஊழியர்கள் உடனடி யாக வெளியேற்றப்பட்டு, மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்களும் போலீஸாரும் சோதனை நடத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in