முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் நடத்தை குறித்து விசாரிக்க கோரிக்கை: மனு விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் : கோப்புப்படம்
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் : கோப்புப்படம்
Updated on
1 min read


உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் நடத்தை பற்றி விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவை விசாரிக்க மறுத்து உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வடகிழக்கு மாநிலங்களில் இருந்து முதன்முதலாக தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் ரஞ்சன் கோகய். இவரின் காலத்தில்தான் நூற்றாண்டுகளாக நடந்து வந்த பாபர்மசூதி ராமர் கோயில் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் 17-ம் தேதி ஓய்வு பெற்ற ரஞ்சன் கோகய் சமீபத்தில் மாநிலங்களவை எம்.பியாக பதவி ஏற்றுள்ளார்.

இந்நிலையில் அருண் ராமச்சந்திர ஹூப்லிக்கர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் “ உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய் நடத்தைப் பற்றியும், அவர் செய்த செயல்கள், செய்யத் தவறியவை பற்றியும் விசாரி்க்க 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா, நீதிபதிகள் பிஆர் காவே, கிருஷ்ணா முராரி ஆகியோர் தலைமையிலான அமர்வில் இன்று விசாரிணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் அமர்வு கூறுகையில் “ இது தேவையில்லாத பொதுநலன் மனு. நாங்கள் கேட்கிறோம், மனுதாரர் ஏன், கடந்த 2 ஆண்டுகளாக இது போன்ற மனுவை தாக்கல் செய்யவில்லை. அதுமட்டுமல்லாமல், தற்போது ரஞ்சன் கோகய் ஓய்வு பெற்றுச் சென்றுவிட்டார். மன்னித்துவிடுங்கள், இந்த மனுவை நாங்கள் விசாரிக்க முடியாது. இதை தள்ளுபடி செய்கிறோம்” எனத் தெரிவித்தனர்.

அதற்கு மனுதாரர், இந்த மனுவை பட்டியலிடக் கோரி உச்ச நீதிமன்றத்தின் செயலாளரைச் சந்தித்தேன், ஆனால் பட்டியலிடவில்லை எனத் தெரிவித்தார். ஆனால், இந்த மனுவை விசாரிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in