

டெல்லியில் மேற்கொள்ளப்பட்ட 2வது சீரலாஜிக்கல் சர்வேயில் மக்களிடையே பரவும் பெருந்தொற்று நோய் குறித்த ஆய்வாளர்கள் கூறும்போது டெல்லியில் 29.1% மக்களுக்கு வைரஸ் தடுப்பு ஆண்ட்டிபாடி மேம்பாடு அடைந்துள்ளது, இதனால் மெதுவே ஹெர்ட் இம்யூனிட்டி நோக்கி முன்னேறுகிறது என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆண்ட்டிபாடிகள் 6 மாதங்களுக்கு செயல்பூர்வமாக இருக்கும், அதே போல் ’சீரோ’ பரவலும் அதிகரித்துள்ளது நல்ல அறிகுறி என்கின்றனர்.
மக்கள் தொகையில் பெரும்பகுதியினருக்கு நோய் எதிர்பாற்றால் பெருகும் போது வைரஸ் சங்கிலி உடைக்கப்படுகிறது. இதன் மூலம் பரவல் தடுக்கப்படுகிறது. இதுதான் ஹெர்டு இம்யூனிட்டி என்று வழங்கப்படுகிறது.
“இரண்டு ஆய்வுகளுக்கு இடையே 6% மக்களுக்கு ஆண்ட்டிபாடி மேம்பாடு அடைந்துள்ளது. நோய்ப்பரவல் இப்போதைக்கு அதிகரித்தாலும் மரண விகிதம் குறைந்து வருகிறது. இதுதான் நாம் மெதுவே ஹெர்டு இம்யூனிட்டி நிலையை நோக்கி நகர்வதை குறிக்கிறது” என்று பெங்களூருவில் உள்ள இந்தியப் பொதுச் சுகாதார பேராசிரியர் கிரிதர பாபு கூறியுள்ளார்.
அதாவது வைரஸை செயலிழக்கச் செய்யும் ஆண்டிபாடிகளும், செயலிழக்கச் செய்யாத ஆண்டிபாடிகள் மற்றும் டி-செல் இம்யூன் எதிர்வினையும் இரண்டு ஆய்வுகளிலும் தெரியவந்துள்ளது. இந்த 3 விதமான நோய் எதிர்பாற்றல்களும் மக்களிடையே 60% வரைக்கும் இருக்குமானால் ஹெர்டு இம்யூனிட்டி நிலையை அடைந்து விட்டதாக அர்த்தம் என்கிறார் அவர்.
வைரஸ் செயலிழப்பு ஆண்டிபாடிகள் 3 மாதம் முதல் 6 மாதங்கள் வரை உடலில் இருக்கும் என்கிறார் கிரிதர பாபு.
“டெல்லியில் சில இடங்களில் ஹெர்டு இம்யூனிட்டி ஏற்கெனவே உருவாகியுள்ளதாகக் கொள்ள முடியும். ஆனால் மக்கள் அடர்த்தியாக இருக்கும் நகரங்களில் 50% மக்களுக்கும் அதிகமாக ஆண்ட்டிபாடிகள் மேம்பாடு அடைந்தால் ஹெர்டு இம்யூனிட்டி உருவாகும்” என்று டாக்டர் முலியில் என்பவர் தெரிவித்துள்ளார்.
அரசு இந்த நிலையில் நிறைய கரோனா வைரஸ் உடல் பரிசோதனைகளை நடத்த வேண்டும், மும்பையும் டெல்லியும் ஹெர்டு இம்யூனிட்டி நோக்கி சீராக முன்னேறி வருகிறது என்று கூறுகின்றனர் தொற்று நோய் நிபுணர்கள்.