Published : 01 Sep 2015 08:21 AM
Last Updated : 01 Sep 2015 08:21 AM

சிறுமியை 3 முறை கடத்தி பலாத்காரம்: உ.பி. போலீஸ் அதிகாரிகளின் அலட்சியத்துக்கு தேசிய மனித உரிமை ஆணையம் கண்டனம்

உத்தரப் பிரதேசத்தில் சிறுமியை 3 முறை கடத்தி பலாத்காரம் செய்த போலீஸ் உதவி ஆய்வாளர் உட்பட குற்றவாளிகள் மீது எந்த நடவடிக் கையும் எடுக்காததற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் 15 வயது சிறுமியை கடந்த 2014 மே 23-ம் தேதி சிலர் கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் சகோதரர் அளித்த புகாரின்படி அலிகார் பிஸாவா போலீஸ் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

பலாத்கார பாதிப்பில் இருந்து தேறிய சிறுமி, பிஸாவா போலீஸ் நிலையத்தில் போலீஸ் உதவி ஆய்வாளர் மற்றும் 4 பேர் தன்னை பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்தார்.

ஆனால் குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியில் சுற்றி வந்தனர். அத்துடன் பாதிக் கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை மிரட்டி உள்ளனர். அதன்பிறகு 2014 ஜூன் 25-ம் தேதி போலீஸ் உதவி ஆய்வாளர் மற்றும் 8 பேர் சேர்ந்து சிறுமியை மீண்டும் கடத்தி உள்ளனர்.

அதன்பிறகு மீண்டும் பிஸாவா போலீஸ் நிலையம் மற்றும் அலிகார் மாவட்ட போலீஸ் கண் காணிப்பாளரிடம் புகார் தெரி விக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. குற்றவாளிகளில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. சமாதானமாக சென்றுவிட பாதிக் கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை போலீஸ் உதவி ஆய்வாளர் தொடர்ந்து நிர்பந்தப்படுத்தி உள்ளார். அதற்கு ஒப்புக் கொள்ளா ததால், 3-வது முறையாக சிறுமியை கடத்தி சென்று பலாத் காரம் செய்துள்ளனர்.

இதுகுறித்து கண்டனம் தெரிவித் துள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், 4 வாரங் களுக்குள் பதில் அளிக்க உத்தரப் பிரதேச தலைமை செயலர், டிஜிபி ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் நீதிபதி டி.முருகேசன் கூறுகையில், ‘‘பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவளது குடும்பத்தினருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவும் ஆணையம் உத்தர விட்டுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x