

பிஹார் தேர்தலில் எந்த வழியை பின்பற்றியாவது வெற்றி பெற வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தீவிரமாக உள்ளார் என பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக தொலைக் காட்சிக்கு அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
நேர்வழி, குறுக்குவழி என எல்லா வழிகளையும் பின்பற்றி பிஹார் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்புடன் தீவிரமாக களத்தில் இறங்கி இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால் அவரது முயற்சி வெற்றிபெறாது. எனக்கு பிரதமர் மீது தனிப்பட்ட பகைமை ஏதும் இல்லை.
ஆனால் அரசியல் அமைப்பு சட்டத்தின் உயர்ந்த பதவியில் உள்ள அவர் கையாளும் வார்த்தைகள் பதவிக்கு உகந்ததாக இல்லை. இது என்னை திக்குமுக்காடவைக்கிறது. அவர் கையாளும் வார்த்தைகள், அணுகுமுறைகளைக் கவனித்தால் அவர் டெல்லி தேர்தலில் தோல்வி யுற்றதை இன்னும் மறக்கமுடியா மல் தவிக்கிறார் என்பது புரியும். சுதந்திரப் போராட்டத்துடன் எந்த தொடர்பும் இல்லாத பின்னணியிலி ருந்து அரசியலுக்கு வந்த அவரிடம் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. அவர் சார்ந்த ஆர்எஸ்எஸ் அமைப்பும் நாட்டின் விடுதலைப் போராட்டத்துடன் தொடர்பு இல்லா தது ஆகும்.
ஆட்சிக்கு வந்துள்ள பாஜக மாநிலங்களை தமது ஆளுகையில் கொண்டு வரவேண் டும் என்பதற்காக பேராசை பிடித்து அலைகிறது. காங்கிரஸும் முன்பு இப்படித்தான் அலைந்தது. ஆனால் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் முழு புரட்சி இயக்கம் காரணமாக தோல்வியுற்றது.
கடந்த காலத்தில் ஆற்றிய பணி களை முன்வைத்து வாக்காளர் களை அணுகி ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு திரட்டும். கல்வி, சாலைகள், மின்சாரம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாநில அரசு நிறைய பணிகளைச் செய்துள்ளது.
திறன் மேம்பாட்டுக்கு முக்கியத் துவம் அளிக்கும் வகையில் தொலைநோக்கு திட்டம் வகுக் கப்பட்டுள்ளது. இவ்வாறு நிதிஷ் குமார் தெரிவித்தார்.