Published : 20 Aug 2020 07:52 AM
Last Updated : 20 Aug 2020 07:52 AM

பிஎம் கேர்ஸ் பொது அதிகாரத்தின் கீழ் ஏன் வராது? - கேள்வி எழுப்பும் சமூக செயல்பாட்டளர்

பிஎம் கேர்ஸ் நிதி பொது அதிகாரத்தின் கீழ் வராது எனவே அதுகுறித்த தகவலுரிமைச் சட்டத்தின் அடிப்படையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியதில்லை என்று மத்திய அரசு கூறிவரும் நிலையில் பிஎம் கேர்ஸ் மத்திய அரசு உருவாக்கியதுதான் என்பதற்கான வாதமாக மத்திய கார்ப்பரேட் அமைச்சகத்தின் மெமோ ஒன்று இருப்பதாக ஆர்டிஐ கோரிக்கை மூலம் தெரிய வந்துள்ளதாக சமூக செயல்பாட்டாளர் அஞ்சலி பரத்வாஜ் கூறுகிறார்.

இது தொடர்பாக தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் வந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: மார்ச் 27ம் தேதி பிஎம் கேர்ஸ் நிதி பொது அறக்கட்டளை என்பதாக பதிவு செய்யப்பட்டது. மார்ச் 28ம் தேதி பிஎம் கேர்ஸ் பற்றி செய்தி அறிக்கை வெளியானது. நன்கொடைகள் வரத்தொடங்கின. அதே மார்ச் 28ம் தேதி இரவு 9.52 மணியளவில் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி பிரிவின் உதவி இயக்குநர் அபர்ணா முதியம் சுற்றறிக்கை ஒன்றை வரைகிறார், அதில் பிஎம் கேர்ஸ் நிதிக்கு நிதியளிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நிதி காப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டியின் கீழ் வரும் என்று குறிப்பிட்டுள்ளதாகவும், பிறகு 11.29 மணியளவில் கார்ப்பரேட் விவகாரச் செயலர் ஸ்ரீநிவாஸ் இஞ்ஜேட்டி சுற்றறிக்கையை வெளியிட ஒப்புதல் தெரிவித்துள்ளார், என்று சமூக செயல்பாட்டாளர் அஞ்சலி பரத்வாஜ் ஆர்டிஐ கோரிக்கை மூலம் பெற்ற ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

அந்த சுற்றறிக்கையில் மத்திய அரசு சமூக பொருளாதார வளர்ச்சி மற்றும் நிவாரணத்துக்காக உருவாக்கும் எந்த ஒரு நிதிக்கும் பங்களிப்பு செய்ய 2013-ம் ஆண்டு நிறுவனச்சட்டத்தின் ஷெட்யூல் 7, உருப்படி 8-ன் கீழ் வழிவகை செய்யப்பட்டுள்ளது, எனவே பிஎம் கேர்ஸ் நிதிக்கு பங்களிப்பு செய்வது தகுதியுடைய கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு செயல்பாடாகும், என்று கூறப்பட்டுள்ளது.

மே, 27ம் தேதி மத்திய கார்ப்பரேட் அமைச்சகம் நிறுவனச் சட்டம் ஷெட்யூல் 7-ல் திருத்தம் கொண்டு வந்து பிஎம் கேர்ஸ் நிதியை அந்தப் பட்டியலில் சேர்த்துள்ளது. இப்படிச் சேர்த்ததன் மூலம் நிதியம் மத்திய அரசினால் உருவாக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்றாகி விட்டது. இது மார்ச் 28ம் தேதி என்ற முன் தேதியிட்ட நாளிலிருந்து பொருந்தும் என்று திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இது குறித்து கேள்வி எழுப்பிய சமூக செயல்பாட்டாளர் அஞ்சலி பரத்வாஜ், “பிஎம் கேர்ஸ் என்பது மத்திய அரசினால் உருவாக்கப்பட்டது என்பதை மத்திய கார்ப்பரேட் அமைச்சகம் நம்பியிருக்கும் போது பிரதமர் அலுவலகம் ஏன் தொடர்ச்சியாக பிஎம் கேர்ஸ் குறித்த ஆர்டிஐ கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டும், பிஎம் கேர்ஸ் பொது அதிகாரத்தின் கீழ் வராது என்று கூற வேண்டும்? முன் தேதியிட்டு சட்டத்தை திருத்த வேண்டிய தேவை என்ன?” என்று கேள்வி எழுப்புகிறார்.

மேலும் மார்ச் 28ம் தேதி, அந்த நிதியாண்டு முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் சனிக்கிழமை இரவு அவசரமாக ஏன் சுற்றறிக்கை வெளியிட வேண்டும்? பிஎம் கேர்ஸ் இணையதளம் மார்ச் 31ம் தேதியன்று ரூ.3,076 கோடி இருப்பு காட்டியது. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் மேற்கொண்ட ஆர்டிஐ கோரிக்கையில் 2019-20ம் ஆண்டுக்கான பயன்படுத்தாத கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி தொகையினை பிஎம் கேர்ஸுக்கு பொதுத்துறை நிறுவனங்கள் அளித்துள்ளன என்கிறார் அஞ்சலி, பரத்வாஜ்.

ஆகவே அஞ்சலி பரத்வாஜ் கூறுவதென்னவெனில் பிஎம் கேர்ஸ் மத்திய அரசு உருவாக்கியதுதான் என்று கொள்வதற்கான அடையாளமாக சுற்றறிக்கை இருக்கும் போது அது பொது அதிகாரத்தின் கீழ் வராது என்று ஏன் தொடர்ந்து பிரதமர் அலுவலகம் கூற வேண்டும்? என்று கேள்வி எழுப்புகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x