

காஷ்மீரில் 10 ஆயிரம் வீரர்களை உடனடியாக திரும்ப அழைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
காஷ்மீரில் கடந்த பல ஆண்டுகளாக தீவிரவாதம் அதிகரித்து வந்தநிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் சி.ஆர்.பி.எப். ,மத்திய ஆயுதப்படை போலீசார், மத்திய கம்பெனிகள் பாதுகாப்புபடை, துணை ராணுவப்படை, எல்லை பாதுகாப்புபடை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அங்கு கடந்த சில ஆண்டுகளாகவே தீவிரவாத நடவடிக்கைகள் குறைந்து வருகின்றன. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வாபஸ் பெறப்பட்டது. இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
இந்நிலையில் காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த படை வீரர்களில் 10 ஆயிரம் துணை ராணுவப்படை வீரர்களை உடனடியாக திரும்ப அழைக்க முடிவெடுக்கப்பட்டது.