

தேசிய ஆள்தேர்வு முகமை அமைக்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசுப் பணிகளுக்கு ஆள்தேர்வு நடைமுறைகளில் நிலைமாற்றத்துக்கான சீர்திருத்தங்களை உருவாக்கும் வகையில் தேசிய ஆள்தேர்வு முகமை ஒன்றை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ‘‘கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு, தேசிய ஆள்தேர்வு முகமை, ஒரு வரமாக இருக்கும். பொது தகுதித் தேர்வு மூலம், ஏராளமான தேர்வுகள் தவிர்க்கப்படுவதுடன், விலை மதிப்பற்ற நேரம் மிச்சமாகி, செலவுகளும் குறையும். மேலும், வெளிப்படைத்தன்மைக்கு இது பெரும் ஊக்குவிப்பாக இருக்கும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.