Published : 19 Aug 2020 08:45 PM
Last Updated : 19 Aug 2020 08:45 PM

கேரளத்தில் 2 ஆயிரத்தைத் தாண்டிய தொற்று எண்ணிக்கை: சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தகவல்

திருவனந்தபுரம்

கேரளாவில் 2,333 பேருக்குப் புதிதாகக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

''கேரளாவில் இன்று 2,333 பேருக்குப் புதிதாகக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்பு மூலம் 2,151 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 53 பேருக்கு தொற்றுக்கான ஆதாரம் தெரியவில்லை. இந்த நோயால் கண்டறியப்பட்டவர்களில் 60 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 98 பேர் பிற மாநிலங்களிலிருந்தும் திரும்பி வந்துள்ளனர். 17 சுகாதாரப் பணியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், சிகிச்சையில் உள்ள 1,217 நோயாளிகள் குணமடைந்து இன்று வெளியேற்றப்பட்டனர்.

கரோனா தொற்று காரணமாக இன்று ஏழு மரணங்கள் உறுதி செய்யப்பட்டன. திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பார்கவி (90), மீனாட்சி (86), பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த சம்சுதீன் (65), கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜன் (56), எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜமீலா (53), டிவி மத்தாய் (67), தங்கப்பன் (64) ஆகியோர் ஆவர். இதனால் கரோனா இறப்பு எண்ணிக்கையை 182 ஆக உள்ளது. ஆலப்புழாவின் என்.ஐ.வி.யில் அடுத்தடுத்த சோதனைகளுக்குப் பிறகு மேலும் இறப்புகள் உறுதி செய்யப்படும்.

மாவட்டவாரியாகப் புள்ளி விவரம்:
திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 540 பேர், மலப்புரம் மாவட்டத்தில் 322, ஆலப்புழா மாவட்டத்தில் 253, எர்ணாகுளம் மாவட்டத்தில் 230, கோட்டயம் மாவட்டத்தில் 203, காசர்கோடு மாவட்டத்தில் 174, கண்ணூர் மாவட்டத்தில் 126, திருச்சூர் மாவட்டத்தில் 97, பத்தனம்திட்டா மாவட்டத்தில் 87, கோழிக்கோடு மாவட்டத்தில் 78 , கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 77 பேர், பாலக்காடு மாவட்டத்தில் 65 பேர், இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 64 பேர், வயநாடு மாவட்டத்தில் 17 பேர் இன்று கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் ஆவர்.

தொடர்புகள் மூலம் நோய்த் தொற்று கண்டவர்களின் மாவட்ட வாரியான விவரம்:
திருவனந்தபுரம் மாவட்டத்தில் 519, மலப்புரம் மாவட்டத்தில் 297, ஆலப்புழா மாவட்டத்தில் 240, எர்ணாகுளம் மாவட்டத்தில் 214, கோட்டயம் மாவட்டத்தில் 198, காசர்கோடு மாவட்டத்தில் 154, கண்ணூர் மாவட்டத்தில் 122, திருச்சூர் மாவட்டத்தில் 89, பத்தனம்திட்டா மாவட்டத்தில் 78, கொல்லம் மாவட்டத்தில் 74, கோழிக்கோடு மாவட்டத்தில் 60, பாலக்காடு மாவட்டத்தில் 55, இடுக்கி மாவட்டத்தில் 38, வயநாடு மாவட்டத்தில் 13 ஆகும்.

பாதிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் எண்ணிக்கை:
திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஏழு, மலப்புரம் மாவட்டத்தில் ஐந்து, எர்ணாகுளம் மாவட்டத்தில் மூன்று, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் தலா ஒருவர். எர்ணாகுளம் மாவட்டத்தில் ஏழு ஐ.என்.எச்.எஸ் பணியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களில் அடங்குவர்.

இன்று பரிசோதனையில் குணமான நோயாளிகளின் எண்ணிக்கை:
திருவனந்தபுரம் மாவட்டத்தில் 224, கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 41, பதனம்திட்டா மாவட்டத்தில் 18, ஆலப்புழ மாவட்டத்தில் 65, கோட்டயம் மாவட்டத்தில் 54, இடுக்கி மாவட்டத்தில் ஐந்து, எர்ணாகுளம் மாவட்டத்தில் 101, திருச்சூர் மாவட்டத்தில் 28, 103 பாலக்காடு மாவட்டத்தில், மலப்புரம் மாவட்டத்தில் 263, கோழிக்கோடு மாவட்டத்தில் 174, வயநாடு மாவட்டத்தில் 12, கண்ணூர் மாவட்டத்தில் 48, காசர்கோடு மாவட்டத்திலிருந்து 81.

தற்போது வரை, 32,611 பேர் கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணப்படுத்தப்பட்டுள்ளனர், தற்போது, 17,382 நோயாளிகள் மாநிலத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது மாநிலம் முழுவதும் 1,69,687 நபர்கள், 1,55,928 பேர் தங்கள் வீடுகளில் அல்லது நிறுவன தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் மற்றும் 13,759 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். 1,730 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில், சோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, கடந்த 24 மணி நேரத்தில் 36,291 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. சென்டினல் கண்காணிப்பின் ஒரு பகுதியாக உயர் பொது வெளிப்பாட்டுக் குழுக்களின் 1,53,433 மாதிரிகள் உட்பட மொத்தம் 12,76,358 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இன்று 19 புதிய ஹாட்ஸ்பாட்கள் ஏற்படுத்தப்பட்டன, அதே நேரத்தில் 12 இடங்கள் பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளன. கேரளாவில் இப்போது 572 ஹாட்ஸ்பாட்கள் உள்ளன''.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x