எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறல்: 15 நாட்களில் 5-வது முறையாக தாக்குதல்

எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறல்: 15 நாட்களில் 5-வது முறையாக தாக்குதல்
Updated on
1 min read

இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு நிலையை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த 15 நாட்களில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துவது இது 5-வது முறையாகும்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்திய எல்லைக் கட்டுப்பாடு நிலையை குறி வைத்து நேற்று (சனிக்கிழமை) இரவு 11.30 மணி அளவில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.

பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய தரப்பும் தக்க பதில் தாக்குதல் நடத்தியதாக பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய தரப்பில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மே 5-ம் தேதி ரஜோரி மாவட்டம் பிம்பெர் கலி எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் தானியங்கி ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

மே 3-ம் தேது பூஞ்ச் மாவட்டத்தில் மேந்தார் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

இதேபோல் ஏப்ரல் 28-ம் தேதி ரஜோரி மாவட்டத்திலும், ஏப்ரல் 25-ம் தேதி பூஞ்ச் மாவட்டத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in