Last Updated : 09 Sep, 2015 09:01 AM

 

Published : 09 Sep 2015 09:01 AM
Last Updated : 09 Sep 2015 09:01 AM

2016-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் கிராமங்களில் 100 சதவீத எழுத்தறிவை ஏற்படுத்த இலக்கு: சன்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா அறிமுகம்

2016-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் கிராமப் பகுதிகளில் 100 சதவீத எழுத்தறிவை ஏற்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

சன்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா என்ற பெயரிலான இந்த திட்டத்தை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று அறிவித்தார்.

டெல்லியில் நேற்று நடை பெற்ற சர்வதேச எழுத்தறிவு நாள் தின விழாவில் இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியது: தங்கள் தொகுதிகளில் சன்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தை செயல்படுத்த வேண்டிய கிராமங்களை அடையாளம் கண்டு தகவல் அளிக்குமாறு அனைத்து எம்.பி.க்களுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த கிராமங்களில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் எழுத்தறிவை ஏற்படுத்துவோம் என்றார்.

இந்த விழாவில் எழுத்தறிவு திட் டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டு குடியரசுத் தலைவரால் கவுரவிக்கப்பட்டது.

இதே நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, எழுத்தறிவுதான் வளர்ச்சி, சுயமுன்னேற்றம், நிலைத்தன்மை போன்றவற்றை ஏற்படுத்தும். கல்வி அறிவு பெற்ற ஒவ்வொருவரும் கல்வி அறிவு இல்லாதவர்களில் ஒரு வருக்காவது கற்பிக்க வேண்டும் என்று யுனெஸ்கோ கூறியுள்ளது. நாட்டில் அனைவருக்கும் கல்வி அறிவை அளிக்காமல் நாம் வேறு எந்த சாதனைகளை படைத் தாலும் அது முழுமையடையாது என்று பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x