Published : 18 Aug 2020 03:53 PM
Last Updated : 18 Aug 2020 03:53 PM

‘‘பிரதமர் மோடியை பொதுமக்கள் தடி கொண்டு அடித்து விரட்டுவார்கள் எனப் பேசுவது சரியா?- காங்கிரஸுக்கு பாஜக சரமாரி கேள்வி

புதுடெல்லி

பிரதமர் மோடியை பொதுமக்கள் தடி கொண்டு அடித்து விரட்டுவார்கள் என ராகுல் காந்தியும் பேசியுள்ளார், இது வெறுக்கத்தக்க பேச்சு இல்லையா என்பதை காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் வாட்ஸ்அப், பேஸ்புக்கை ஆகிய சமூகவலைதளங்களை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பத்திரிகையை செய்தியை மேற்கோள் காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

‘‘இந்தியாவில் வாட்ஸ்அப், பேஸ்புக்கை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகிறது. சமூக வலைதளங்களில் போலி செய்திகளை பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது. ஃபேஸ்புக்கின் உண்மை நிலையை அமெரிக்க ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன’’ என்று பதிவிட்டார்.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பாஜக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த குற்றச்சாட்டு குறித்து பேஸ்புக் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பாஜக தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சை பேஸ்புக் கண்டுகொள்வதில்லை என்ற காங்கிரஸ் குற்றச்சாட்டை அந்நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்தநிலையில் இந்தியாவின் தேர்தல் ஜனநாயகத்தில் ஃபேஸ்புக் இந்தியா நிர்வாகம் தலையிடுவது குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பர்கிற்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:

கடந்த காலங்களில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடியை பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார். பிரதமர் மோடியை பொதுமக்கள் தடி கொண்டு அடித்து விரட்டுவார்கள் என ராகுல் காந்தியும் பேசியுள்ளார். இது வெறுக்கத்தக்க பேச்சு இல்லையா என்பதை காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும். தொடர்ந்து மற்ற கட்சித் தலைவர்களை தரக்குறைவாகவும், வெறுக்கத்தக்க வகையிலும் பேசி வரும் காங்கிரஸ் தலைவர்களுக்கு இதுபற்றி புகார் கூற எந்த தகுதியும் இல்லை.’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x