

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக டெல்லி ராணுவ மருத்துவமனைதெரிவித்துள்ளது.
பிரணாப் முகர்ஜி (84) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த10-ம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு மூளையில் ரத்த உறைவுஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, அவருக்கு மூளையில் அவசரஅறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதன் பின்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. மேலும், அவருக்கு கரோனா தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரணாப், சில நாட்களுக்கு பிறகுகோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். பின்னர் அவரதுஉடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன்அபிஜித் முகர்ஜி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், டெல்லி ராணுவமருத்துவமனை நேற்று வெளியிட்ட அறிக்கையில், “பிரணாபின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்” என கூறப்பட்டுள்ளது.