கரோனா தொற்று; நாடுமுழுவதும் களநிலவரம்: முழுமையான தகவல்
· ஒரே நாளில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கையில் 57,684 என உச்சத்தைத் தொட்டது இந்தியா
· குணம் அடைந்தவர்கள் விகிதம் 72 சதவீதத்தைக் கடந்தது. குணம் அடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை விரைவில் 2 மில்லியனைத் தாண்டும்
· நாட்டில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 6,76,900 ஆக உள்ளது. நோய் பாதித்தவர்களில் இது 25.57 சதவீதமாக உள்ளது.
· 3 கோடி மருத்துவப் பரிசோதனைகள் செய்து இந்தியா புதிய தடம் பதித்தது; ஒரு மில்லியன் பேருக்கான பரிசோதனை எண்ணிக்கை இன்று 21,769 ஆக இருந்தது.
· நாட்டில் பொது சுகாதாரக் கட்டமைப்பு குறித்து மறுஆய்வு செய்து, வசதிகளை உருவாக்க புதிய சிந்தனைகளில் ஈடுபடுவதற்கு இந்த நோய்த் தொற்றுச் சூழல் புதிய வாய்ப்பை அளித்திருக்கிறது என டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் கருத்து.
· தனிமைப்படுத்தல் மையம் மற்றும் கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க, நாடு முழுக்க 16 ஹஜ் இல்லங்கள் மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக நக்வி தகவல்
மாநிலங்கள் வாரியாக தகவல்கள்
தமிழ்நாடு: கோவையில் காவல் துறையின் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இரண்டு பேருக்கு கோவிட்-19 கண்டறியப்பட்டதால், கிருமிநீக்கம் செய்வதற்காக அந்த அலுவலகம் மூடப்பட்டுள்ளது. தமிழகத்திற்குள் பயணம் செய்வதற்கான இ-பாஸ் வழங்கும் முறை தானியங்கி முறையில் அளிக்கப்படுகிறது. நியாயமான காரணங்களுக்கு மட்டும் இ-பாஸ் கோரி விண்ணப்பிக்குமாறு மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று 5950 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டனர், 6019 பேர் குணம் பெற்றனர், 125 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. பாதிப்புக்கு உள்ளானோர் மொத்த எண்ணிக்கை 3,38,055; சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை: 54,109; மரணங்கள் எண்ணிக்கை: 5766; வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை : 2,78,270; சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை: 11,498.
புதுவையில் மருத்துவமனைகளில் உள்ள கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கையை விட வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நோயாளிகள் எண்ணிக்கை 8000-ஐ கடந்தது. 1596 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில், 1692 பேர் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
கர்நாடகம்: அறிகுறிகள் தென்படுபவர்களில் 34.8 சதவீதம் பேருக்கும், அறிகுறி தென்படாதவர்களில் 13.4 சதவீதம் பேருக்கும் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாக மாநில கோவிட்-19 கட்டுப்பாட்டு அறை வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆந்திரப்பிரதேசம்: கையாள வேண்டிய தரநிலைப்படுத்திய செயல்பாட்டு நடைமுறைகளுக்கு மாநில அரசு இன்னும் ஒப்புதல் அளிக்காத நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பால், சுற்றுலாத் தலங்களில் பொது மக்கள் அனுமதிக்கப்படாமல் மூடப்பட்டுள்ளன என்று ஆந்திரப் பிரதேச சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார். பாதிப்புக்கு உள்ளானோர் மொத்த எண்ணிக்கை 2,89,829; சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை: 85,945; மரணங்கள் எண்ணிக்கை: 2650;
தெலங்கானா: கடந்த 24 மணி நேரத்தில் புதிய பாதிப்புகள் எண்ணிக்கை 894, குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2006 மற்றும் 10 மரணங்கள் பதிவாகியுள்ளன; இந்த 894 பேரில், ஜி.எச்.எம்.சி.யில் 147 பேருக்குப் பாதிப்பு கண்டறியப்பட்டது. பாதிப்புக்கு உள்ளானோர் மொத்த எண்ணிக்கை 92,255; சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை: 21,420; மரணங்கள் எண்ணிக்கை: 703; வீடு திரும்பியவர்கள்: 70,132.
கேரளா: கோவிட்-19 பாதிப்பால் மதியம் வரையில் ஒன்பது மரணங்கள் பதிவானதை அடுத்து, இந்த நோய்க்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 165 ஆக உயர்ந்தது. மலையாளப் புத்தாண்டான இன்று முதல் தேவஸ்வம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், கோவிட் நடைமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் அனுமதிக்கப் படுகின்றனர்.
ஹரியாணா: ஹரியானாவில் வேளாண்மைப் பணிகளை ஆபத்து இல்லாததாக ஆக்கிடவும், விளைபொருள்களை விற்பதை எளிமைப்படுத்தவும் மாநில அரசு ‘MeriFasalMeraByora முனையத்தைத்’ தொடங்கி இருப்பதாக மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
அருணாச்சலப் பிரதேசம்: கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 43 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 37 பேர் குணம் அடைந்துள்ளனர். இப்போது மாநிலத்தில் 888 பேர் கோவிட் பாதிப்புக்கான சிகிச்சையில் உள்ளனர்.
அசாம்: வறுமை ஒழிப்புக்கான `ஒருனோடோய்' என்ற திட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிகாட்டுதலை மாநில அரசு வெளியிட்டுள்ளது. 19 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு மாதத்துக்கு தலா ரூ.830 உதவித் தொகை அவர்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 15,000 குடும்பங்கள் இதில் பயன்பெறும்.
மணிப்பூர்: மணிப்பூர் மாநிலத்தில் கோவிட் பாதிப்பு 179 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 111 பேர் மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள். மணிப்பூர் மாநிலத்தில் 1,921 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். குணம் பெற்றவர்கள் அளவு 57 சதவீதமாக உள்ளது.
மிசோரம்: மிசோரம் மாநிலத்தில் நேற்று மேலும் 12 பேருக்கு கோவிட் பாதிப்பு கண்டறியப்பட்டது. பாதிப்பு ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 789, சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 418.
நாகாலாந்து: மாநிலத்தில் 15,843 படுக்கை வசதிகளுடன் 261 தனிமைப்படுத்தல் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக நாகாலாந்து சுகாதாரத் துறை அமைச்சர் பங்னியுபோம் தெரிவித்துள்ளார். இதில் அரசு சார்பில் 206 மையங்களும், கட்டணம் செலுத்தும் அடிப்படையில் 55 மையங்களும் உள்ளன. திமாப்பூரில் தரநிலைப்படுத்திய செயல்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
சிக்கிம்: சிக்கிமில் மேலும் 19 பேருக்கு கோவிட் பாதிப்பு கண்டறியப்பட்டதால், இந்த நோய்க்கு ஆளாகி தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 493 ஆக உயர்ந்துள்ளது. இந்த நோய்க்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,167 ஆகவும், முற்றிலும் குணமாகி வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 673 ஆகவும் உள்ளன.
மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிரத்தின் உள்பகுதி மாவட்டங்களில் கோவிட் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக மன்காபூரில் 1000 படுக்கை வசதிகளுடன் கூடிய பெரிய மருத்துவமனையை உருவாக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
ராஜஸ்தான்: ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை வரை மூன்று நாட்களுக்கு அனைத்துப் பணிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. தலைமை நீதிபதி இந்திரஜித் மஹந்திக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பதாக முதலாவது பரிசோதனையில் உறுதியானதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ராஜஸ்தானில் தற்போது சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 14,451 ஆக உள்ளது.
மத்தியப் பிரதேசம்: ஞாயிற்றுக்கிழமை 1,022 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. 685 பேர் குணம் பெற்று வீடு திரும்பினர். மத்தியப் பிரதேசத்தில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 10,312 ஆக உள்ளது.
சத்தீஸ்கர்: ஞாயிற்றுக்கிழமை சத்தீஸ்கரில் 576 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நோய்க்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 15,621 ஆக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை 8 நோயாளிகள் இறந்ததால், கோவிட் பாதிப்பில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்தது.
