Published : 17 Aug 2020 05:43 PM
Last Updated : 17 Aug 2020 05:43 PM

நிலச்சரிவு, கனமழைக்கு இடையே 3 வாரத்தில் 180 அடி  நீள பாலம்: எல்லை சாலைகள் நிறுவனம் சாதனை

பிரதிநிதித்துவப் படம்

உத்தரகாண்டில் 20 கிராமங்களுக்கு சாலை இணைப்பை ஏற்படுத்தும் வகையில் 180 அடி நீள பெய்லி பாலத்தை மூன்று வார காலத்தில் எல்லை சாலைகள் நிறுவனம் அமைத்துள்ளது.

உத்தரகாண்டில் பித்தோர்கர் மாவட்டம் ஜாலிஜிபி பகுதியில் அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவு மற்றும் கனமழை ஆகியவற்றுக்கிடையே 180 அடி நீள பெய்லி பாலத்தை மூன்று வார காலத்தில் எல்லை சாலைகள் நிறுவனம் அமைத்துள்ளது.

தா இடத்தில் இருந்த 50 மீட்டர் நீள கான்க்ரீட் பாலம், 2020 ஜூலை 27ம் தேதி கன மழை காரணமாக ஓடைகளிலும், சிற்றாறுகளிலும் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டது. இதனை அடுத்து மிகுந்த விசையுடனான சேற்று வெள்ளம் ஏற்பட்டது. நிலைச் சரிவு காரணமாக பலர் உயிரிழந்தனர். சாலைத் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

இதனை அடுத்து எல்லைச் சாலைகள் அமைப்பு தனது பாலக் கட்டுமானத் திறனையும் ஆதாரங்களையும் திரட்டி பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டது. இப்பணியின் முக்கிய சவால் ஏற்கனவே உருவாக்கப்பட்ட பாலத்தின் பகுதிகளை நிலைச் சரிவு மற்றும் பலத்த மழையினூடே பித்தோர்காரிலிருந்து பாலம் அமைக்கும் இடத்திற்கு கொண்டு செல்வதுதான். எனினும் பாலம் அமைக்கும் பணி 2020 ஆகஸ்ட் 16ம் தேதி நிறைவடைந்தது. இதனால் வெள்ளம் பாதித்த கிராமங்களை சென்றடைவது எளிதாகிப்போனது, ஜெய்ஜிபி கிராமம் முன்சியாரியுடன் இணைக்கப்பட்டது.

இந்தச் சாலைத் தொடர்பையடுத்து 20 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 15000 பேருக்கு நிவாரணப் பொருட்கள் சென்றடையும். புதிதாக அமைக்கப்பட்ட பாலம் காரணமாக ஜாலிஜிபியில் இருந்து முசியாரி வரையிலான 66 கி மீ சாலையில் போக்குவரத்து மீண்டும் தொடங்கி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x