Last Updated : 08 Sep, 2015 09:11 AM

 

Published : 08 Sep 2015 09:11 AM
Last Updated : 08 Sep 2015 09:11 AM

தீவிரவாதிக்கு உண்மை கண்டறியும் சோதனை: என்ஐஏ-க்கு நீதிமன்றம் அனுமதி

உதம்பூரில் பிடிபட்ட தீவிரவாதி களுக்கு உதவி புரிந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சவுகத் அகமது பட் என்பவருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

பாகிஸ்தானிலிருந்து இந்தியா வுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்திய உஸ்மான் கான் (எ) முகமது நவீத் என்ற தீவிரவாதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் கைது செய்யப்பட்டார்.

அவரையும் அவருடன் வந்த தீவிரவாதிக்கும் இந்திய பாகிஸ்தான் எல்லையிலிருந்து அவர்கள் பதுங்கியிருந்த புலவாமா பகுதி வரை செல்வதற்கு வாகன உதவி செய்ததாக, சவுகத் அகமது பட் என்பவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். இவர் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சவுகத் அகமது பட் என்ஐஏ காவலில் வைத்து விசாரிக்கப்படுகிறார். அவர் டெல்லி மாவட்ட நீதிபதி அமர்நாத் முன்னிலையில் நேற்று ரகசியமாக நடந்த விசாரணையின்போது ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, என்ஐஏ தரப்பில், “விசாரணையின்போது சவுகத் அகமது பட் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தருவதால் அவரிடமிருந்து விசாரணைக்குத் தேவையான தகவல்களைப் பெற முடிய வில்லை.

அவரிடமிருந்து பெறப்படும் உறுதியான தகவல்கள், பெரும் சதி நடத்திருப்பதைக் கண்டறிய உதவும். எனவே உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதிக்க வேண்டும்” எனக் கோரப்பட்டது.

இக்கோரிக்கையை ஏற்று, உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிபதி அமர்நாத் அனுமதி வழங்கினார்.

இதையடுத்து, டெல்லியிலுள்ள மத்திய தடயவியல் ஆய்வகத்தில் (சிஎஃப்எஸ்எல்) சவுகத் அகமது பட்டுக்கு இன்று உண்மை கண்டறியும் சோதனை (பாலிகிராப் டெஸ்ட்) நடத்தப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x