Published : 17 Aug 2020 06:39 AM
Last Updated : 17 Aug 2020 06:39 AM

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம் 5 கோடி புதிய வேலைவாய்ப்புகள்: அடுத்த 5 ஆண்டுகளில் உருவாகும் என நிதின் கட்கரி தகவல்

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங் களின் ஏற்றுமதி பங்களிப்பு 60 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் இதன்மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 5 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறு வனங்களின் எதிர்காலம் குறித்து டெல்லியில் தன்னார்வ அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த இணையவழி நிகழ்ச்சியில் அமைச்சர் கட்கரி பேசிய தாவது:

பதிவு செய்யப்படாத சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதன்மூலம் அர சால் அளிக்கப்படும் சலுகைகளை அந்த நிறுவனங்கள் பெற முடியும். இதேபோல சிறு வணிகர்களை ஒருங் கிணைக்கும் நடவடிக்கையும் எடுக் கப்பட்டுள்ளது. தன்னார்வ அமைப்பு கள் (என்ஜிஓ) உதவியுடன் இதை செயல்படுத்த நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

நாட்டின் வளர்ச்சியில் சிறு, குறு மற் றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் அதிகம். நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இவற்றின் பங்கு 30 சதவீத மாக உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இத்துறை மூலமான ஜிடிபி பங்களிப்பு 50 சதவீதமாக உயரும்.

அதேபோல ஏற்றுமதியில் எம்எஸ்எம்இ-க்களின் பங்கு 48 சதவீத மாக உள்ளது. இதுவரை இத்துறை மூலம் 11 கோடி பேருக்கு வேலை கிடைத்துள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் ஏற்றுமதி பங்களிப்பு அடுத்த 5 ஆண்டுகளில் 60 சதவீதம் அளவுக்கு உயரும் என்று நம்புகிறோம். ஏற்றுமதி பங்களிப்பு அதிகரிக்கும்போது 5 ஆண்டுகளில் 5 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.

வெளிநாடுகளில் இருந்து இறக்கு மதி செய்யப்படும் பொருட்களுக்கு மாற்று பொருட்களை நாம் ஆராய வேண்டும். அதேநேரத்தில் ஏற்று மதியை அதிகப்படுத்த வேண்டும். நாட் டில் அந்நிய முதலீடுகள் பெருக வேண் டும். தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும். அதன்மூலம் இந்தியாவை பொருளாதாரத்தில் வலிமை மிகுந்த நாடாக உருவாக்க முடியும். கிராமப் புற மக்களை மேம்படுத்தும் நட வடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அவர்கள் சுயசார்பு நிலையை எட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு நிதின் கட்கரி பேசினார்.

சுயசார்பு பொருளாதாரம்

டாடா குழுமம் ஏற்பாடு செய்திருந்த கல்வி மைய திறப்பு விழாவில் நிதின் கட்கரி காணொலி காட்சி மூலம் பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

தொழில்நுட்ப மேம்பாடு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகியுள் ளது. இதன்மூலம்தான் சுயசார்பு பொரு ளாதார சிந்தனையான ‘ஆத்மநிர்பார் பாரத்’ கொள்கையை எட்ட முடியும்.

தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு ஆராய்ச்சி அடிப்படையிலான கல்வி மையங்கள் மிகவும் அவசியம். இத்தகைய கல்வி மையங்கள்தான் மாணவர்களுக்கு தொழில்நுட்ப அனு பவம் சார்ந்த படிப்புகளை அளித்து, அடுத்த தலைமுறை பொறியாளர் களை தொழில்நுட்பம் பெற்றவர்களாக உருவாக்கும். அத்துடன் அவர்கள் சர்வதேச தரத்திலான பொருட்களை தயாரிக்கவும் வழியேற்படும்.

இந்தியாவில் 65 சதவீத மக்கள் கிராமப் பகுதிகளில் இருந்து வருகிறார்கள். அவர்களது பின்புலம் பெரும் பாலும் வேளாண்மை சார்ந்ததாக உள்ளது. மலைப் பகுதியினரும் கணிச மாக உள்ளனர். இப்பகுதிகளில் இருந்து கிடைக்கும் ஒட்டுமொத்த பங் களிப்பு மிகக் குறைவாக உள்ளது. இதனால் கிராமப்புற தொழில்களை ஊக்குவிக்க வேண்டும். இதற்கு அப்பகுதிகளில் கிடைக்கும் மூலப் பொருட்கள் சார்ந்த தொழில்களை அதிகரிக்கச் செய்ய வேண்டும். வேளாண் மற்றும் வனம் சார்ந்த பொருட்கள் தயாரிப்புக்கு தேவை யான ஆராய்ச்சிகளை கல்வி மையங் கள் மற்றும் நிறுவனங்கள் மேற் கொள்வதோடு அவற்றை தயாரிக் கவும் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x