சம்பல் எக்ஸ்பிரஸ் சாலைக்கு வாஜ்பாய் பெயர்: சிவராஜ் சிங் சவுகான் அறிவிப்பு

சம்பல் எக்ஸ்பிரஸ் சாலைக்கு வாஜ்பாய் பெயர்: சிவராஜ் சிங் சவுகான் அறிவிப்பு

Published on

குவாலியரில் இருந்து சம்பல் வரை அமையும் பிரமாண்ட சம்பல் எக்ஸ்பிரஸ் சாலைத் திட்டத்துக்கு வாஜ்பாய் பெயர் சூட்டப்படும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

பாஜக தலைமையிலான அரசின் முதல் பிரதமர் மூத்த தலைவர் மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாய். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு காலமானார். அவரின் 2-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதையடுத்து டெல்லியில் உள்ள சைதவ் அடல் நினைவிடத்துக்கு இன்று காலை பாஜக தலைவர்கள், பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மத்திய அமைச்சர்கள், பாஜக பிரமுகர்கள் ஆகியோர் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள வாஜ்பாயின் சிலைக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


வாஜ்பாய் உத்தர பிரதேச மாநிலம் லக்னோ தொகுதியின் எம்.பி.யாக நீண்டகாலம் பதவி வகித்ததார். இதையடுத்து அவருக்கு அங்கு பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தசிலையை பிரதமர் மோடி கடந்த ஆண்டு லக்னோவில் திறந்து வைத்தார்.

இதனிடையே மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் இருந்து சம்பல் வரை அமையும் பிரமாண்ட சம்பல் எக்ஸ்பிரஸ் சாலைத் திட்டத்துக்கு வாஜ்பாய் பெயர் சூட்டப்படும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.


8250 கோடி ரூபாய் செலவில் 450 கிலோ மீட்டர் தொலைவுக்கு ம.பி., உ.பி., ராஜஸ்தான் மாநிலங்கள் வழியாக பிரமாண்ட சாலையமைக்கும் சம்பல் எக்ஸ்பிரஸ் சாலைத் திட்டம் செயல்படுத்தபடுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in