

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி, டெல்லியில் உள்ள அவரின் நினைவிடத்துக்குச் சென்று பிரதமர் மோடி, குடியரசுத்த லைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத்துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
பாஜக தலைமையிலான அரசின் முதல் பிரதமர் மூத்த தலைவர் மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாய். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு காலமானார். அவரின் 2-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையடுத்து டெல்லியில் உள்ள சைதவ் அடல் நினைவிடத்துக்கு இன்று காலை பாஜக தலைவர்கள், பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மத்திய அமைச்சர்கள், பாஜக பிரமுகர்கள் ஆகியோர் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த், வெங்கய்ய நாயுடு, வாஜ்பாய் மகள், குடும்பத்தினர் அனைவரும் இன்று காலை வாஜ்பாய் நினைவிடத்துக்கு வந்து மலர்கள்தூவி மரியாதை செலுத்தினர்.
வாஜ்பாய் நினைவு குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ இந்தியாவின் வளர்ச்சி்க்கு நீங்கள் ஆற்றிய அளப்பரிய சேவை, முயற்சிகள் எப்போதும் இந்தியா நினைவில் கொள்ளும். வாஜ்பாயின் புண்ணிய திதியில் அவருக்கு எனது அஞ்சலிகள்” எனத் தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிவிட்ட ட்விட்டர் கருத்தில் “ வாஜ்பாய் தலைமையிலான அரசில்தான் நாடுமுழுவவதும் சிறந்த நிர்வாகத்தை மக்கள் கண்டனர். வாஜ்பாயின் சந்தினைகளைப் பின்பற்றி ஏழை மக்களின் நலனுக்காகவும், நல்ல நிர்வாகத்தை மோடி அரசு வழங்கி வருகிறது” எனத் தெரிவித்தார்
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறிய கருத்தில் “ பொதுவாழ்வுக்கும், நாட்டின்மேம்பாட்டுக்கு வாஜ்பாய் அளப்பரிய பங்களிப்பை செய்துள்ளார், அவை எப்போதும் நினைவில் நிற்கும். தேசத்தைப் பற்றிய அவரின் பார்வை வரும் தலைமுறைக்கும் ஊக்கமாக அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.