

கரோனாவுக்கு எதிராக தொடர்ந்து போரிட்டு வரும் சுகாதாரப் பணியாளர்களை பாராட்டுகிறேன். டாக்டர்கள், நர்ஸ்கள், இதரசுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு நாடு நன்றி கடன்பட்டுள்ளது.
நமது எல்லையை பாதுகாக்கும் முயற்சியில் நமது வீரர்கள் சிலர் உயிர் தியாகம் செய்துள்ளனர். உயிரிழந்த நமது வீரர்களின் துணிச்சலுக்கு நான் தலைவணங்குகிறேன்.
நாட்டின் பெருமைக்காக அந்த பாரத மாதாவின் புதல்வர்கள் வாழ்ந்து மறைந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு நாடு நன்றி கடன்பட்டுள்ளது. இந்தியா, அமைதியில் நம்பிக்கை கொண்ட நாடு. இருப்பினும், ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொண்டால், தக்க பதிலடி கொடுக்கும் திறன்கொண்டது என்பதை அந்த வீரர்களின் துணிச்சல் உணர்த்துகிறது. இவ்வாறு ராம்நாத் கோவிந்த் பேசினார்.