Published : 15 Aug 2020 03:41 PM
Last Updated : 15 Aug 2020 03:41 PM

இந்தியாவில் ஒரே நாளில் அதிகமாக 8.6 லட்சம் கோவிட் மாதிரிகள் சோதனை செய்து சாதனை

புதுடெல்லி

ஒரே நாளில் அதிகம் பேர் குணமடைந்ததன் மூலம் இந்தியா மற்றொரு சாதனையை நிகழ்த்தியது. கடந்த 24 மணி நேரத்தில் 57,381 பேர் குணமடைந்தனர்.32 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் குணமடைந்தனர்.இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

ஒரே நாளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்து அதிக அளவைப் பதிவு செய்து வரும் இந்தியா, ஒரே நாளில் அதிகமானோர் குணமடைந்ததன் மூலம் மற்றொரு உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 57,381 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகையில், இந்தியாவின் குணமடைந்தோர் விகிதம் 70 சதவீதத்தைத் தாண்டியதுடன், மேலும், மேலும் அதிகமானோர் குணமடைவதை உறுதி செய்துள்ளது. இந்த சாதனையை மேலும் அதிகரிக்கும் வகையில், குணமடைந்த நோயாளிகளின் விகிதம் 32 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 50 சதவீத அளவைத் தாண்டியுள்ளது. இது தேசிய குணமடைந்தோர் விகிதத்தை விட அதிகமாகும்.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள் ( லேசான, மிதமான பாதிப்பு உள்ளவர்கள்) அதிக அளவில் குணமடைந்து வருகின்றனர். இன்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியது (18,08,936). குணமடைந்தவர்களுக்கும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு 11 லட்சத்துக்கும் அதிகமாகியுள்ளது (இன்று 11,40,716).

மத்திய, மாநில/யூனியன் பிரதேச அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் பலனாக, தினசரி குணமடைபவர்களின் சராசரி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தற்போது பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் (6,68,220) நாட்டின் மொத்த பாதிப்பில் அடங்குவர். இன்று மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் 26.45 சதவீதம், இது கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு மேலும் குறைந்திருப்பதைக் காட்டுகிறது. இவர்கள் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்..

மருத்துவமனைகளில் செயல்திறன் மிக்க, மேம்பட்ட சிகிச்சையும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிப்பது, நோயாளிகளை உரியநேரத்தில் மருத்துவமனைகளுக்குக் கொண்டு வந்து சேர்ப்பதற்கான ஆம்புலன்ஸ் சேவையில் முன்னேற்றம், புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவர்களின் தொலைதூர ஆலோசனை வழியாக, தீவிர தொழில்நுட்ப வழிகாட்டுதல் மூலம் கோவிட் நோயாளிகளுக்கு மருத்துவர்களின் திறமையான சிகிச்சை ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவில் இறப்பு விகிதம் உலக சராசரியை விட மிகவும் குறைவாக உள்ளது. தற்போது அது 1.94 சதவீதமாக உள்ளது.

சோதனை, கண்டறிதல், சிகிச்சை அளித்தல் என்னும் இந்தியாவின் உத்தி, கடந்த 24 மணி நேரத்தில் 8,68,679 மாதிரிகளை சோதனை செய்து மற்றொரு உச்சத்தை அடைய காரணமாகியுள்ளது. இதுவரை, மொத்தம் சோதிக்கப்பட்ட மாதிரிகள் 2.85 கோடிக்கும் அதிகமாகும்.

படிப்படியான சோதனைகள், சோதனை உத்தி அதிகரிக்கப்பட்டதால், நாட்டின் சோதனை வளையம் விரிவடைந்துள்ளது. இந்த உத்தியைத் தொடர்ந்து கடைப்பிடிக்க, நாட்டின் சோதனைக் கூடக்கட்டமைப்பு தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நாட்டில் 1465 சோதனைக்கூடங்கள் இயங்கி வருகின்றன. இதில் 968 ஆய்வகங்கள் அரசுக்கு சொந்தமானவை; 497 தனியார் ஆய்வகங்கள். அவற்றின் விவரம் வருமாறு;

• ரியல்-டைம் ஆர்டி பிசிஆர் அடிப்படையிலான சோதனைக்கூடங்கள் ; 751 ( அரசு-448 +தனியார் -303)

• ட்ரூநேட் அடிப்படையிலான சோதனைக்கூடங்கள் ;597 ( அரசு-486+தனியார் -111)

• சிபிநேட் அடிப்படையிலான சோதனைக்கூடங்கள் 117 ( அரசு-34+தனியார் -83)

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x