Last Updated : 15 Aug, 2020 11:37 AM

 

Published : 15 Aug 2020 11:37 AM
Last Updated : 15 Aug 2020 11:37 AM

உலக குடிமக்களாக நமது மாணவர்களை மாற்ற தேசியக்கல்விக் கொள்கை உதவும்: 1000 நாட்களில் அனைத்து கிராமங்களுக்கும் இணையதளம்: பிரதமர் மோடி உறுதி


அடுத்த 1000 நாட்களில் நாட்டில் உள்ள 6 லட்சத்துக்கும் மேற்பட்ட அனைத்து கிராமங்களும் கண்ணாடி இழைக் கேபிள்கள் மூலம் இணையதள வசதி செய்து தரப்படும் என பிரதமர் மோடி 74-வது சுதந்திரதின உரையின்போது உறுதியளித்தார்.

தொடர்ந்து 7-வது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டு மக்களுக்கு சுதந்திரன உரையாற்றிய பிரதமர் மோடி, தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கத்தை தனது உரையின் போது அறிமுகம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

2014-ம் ஆண்டுக்குமுன் நாட்டில் நாட்டில் 60 கிராமப் பஞ்சாயத்துக்களில் மட்டும் கண்ணாடி இழைக் கேபிள்கள் மூலம் இணையதள வசதி செய்யப்பட்டு இருந்தது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் நாங்கள் எடுத்த முயற்சியின் காரணமாக 1.50 லட்சம் கிராமங்களில் கண்ணாடி இழைக்கேபிள்கள் மூலம் இணையதள வசதி செய்துதரப்பட்டுள்ளது.

இனிவரும் 1000 நாட்களில் நாட்டில் உள்ள 6 லட்சத்துக்கும் மேற்பட்ட அனைத்து கிராமங்களிலும் கண்ணாடி இழைக் கேபிள்கள் மூலம் இணையதள வசதி செய்து தரப்படும். இந்த திட்டத்தில் கடலுக்குஅடியில் செல்லும் கேபிள்கள் மூலம் லட்சத்தீவுகளுக்கும் இணையதள வசதி செய்து தரப்படும். நாம் விரைவாக நமது கண்ணாடி இழைக் கேபிள்கள் இணையதள வசதியை பெற்றுவருகிறோம்.

சைபர் தாக்குதல், அச்சுறுத்தலில் இருந்து நம்மைப் பாதுக்காக விரைவாக சைபர் பாதுகாப்பு தொடர்பாக புதிய கொள்கை வெளியிடப்படும். இமயமலை முதல் இந்தியப் பெருங்கடல் வரை எப்போதும் இல்லாத வகையில் சாலை மற்றும் இணையதள வசதியை அதிவிரைவாக செய்து கொடுத்து வருகிறோம்.

டிஜிட்டல் பரிமாற்றத்தில் கிராமங்களும் பங்கேற்க வேண்டியது அவசியம். இந்த கரோனா காலத்தில் பிம் செயலி மூலம் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு மட்டுமே டிஜிட்டல் பரிமாற்றம் நடந்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தேசியக் கல்விக் கொள்கை நமது மாணவர்களை உலகக் குடிமக்களாக மாறுவதற்கு உதவி செய்யும். 21ம் நாற்றாண்டுக்கான இந்தியாவை புதிய கல்விக்கொள்கை மாற்றும். நமது மாணவர்களும், மக்களும் சேர்ந்து புதிய இந்தியாவை விரைவாகக் கட்டமைப்பார்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

சமீபத்தில் சென்னை முதல் அந்தமான் நிகோபர் தீவுகள் வரை கண்ணாடி இழைக் கேபிள் மூலம் 2,312 கி.மீ தொலைவுக்கு அதிவேக இணையதள வசதியை சமீபத்தில் தொடங்கிவைத்தார். கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி இந்த திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி சமீபத்தில் இதை நடைமுறைப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x