

காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் திங்கள்கிழமை நடை பெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து விரிவாக அலசி ஆராயப் பட உள்ளது. மேலும் தோல்வி குறித்து ஆய்வு செய்ய சிறப்பு கமிட் டிகளும் நியமிக்கப்பட உள்ளன.
கடந்த 2009 மக்களவைத் தேர்தலில் 206 இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ் தற்போது 44 இடங்களை மட்டுமே பெற்றுள் ளது. எப்போதும் இல்லாத வகையில் அந்தக் கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது.
இந்த நேரத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியி ன் செயல்பாடு, தேர்தலை எதிர் கொள்ள கட்சி தீட்டிய திட்டங்கள், காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தி தலைமையேற்று வழி நடத்திய விதம் ஆகியவை குறித்து அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இவை குறித்து செயற்குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
சோனியா, ராகுல் ராஜினாமா இல்லை
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் நிருபர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் சோனியாவும் துணைத் தலைவர் ராகுலும் தோல்விக்குப் பொறுப்பேற்பதாகத் தெரிவித் தனர். இருவரும் தலைமைப் பொறுப்புகளில் இருந்து விலகு வார்கள் என்று ஊகத் தகவல்கள் வெளியாகின. இதனை காங்கிரஸ் வட்டாரங்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளன. இருவரும் விலகுவது எவ்வித பலனையும் கொடுத்துவிடாது, அது தீர்வும் அல்ல என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் செயல்பாடுகள் குறித்து மூத்த தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ராகுல் வழிநடத்து தலில் தங்களைப் போன்ற மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப் பட்டதே தோல்விக்கு முக்கியக் காரணம் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால் செயற்குழுக் கூட்டத்தில் ராகுல் மீது யாரும் துணிச்சலாக குற்றம் சாட்ட வாய்ப்பில்லை என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு மாநிலங்களில் கட்சிக்கு வலுவான தலைவர்கள் இல்லாததும் தோல்விக்கு முக்கிய காரணம் என்று சில தலைவர்கள் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளனர்.
ஆலோசகர்களுக்கு நெருக்கடி
ராகுல் காந்தியின் ஆலோசகர் களான ஜெய்ராம் ரமேஷ், மோகன் கோபால், மதுசூதன் மிஸ்த்ரி, மோகன்பிரகாஷ், அஜய் மாக்கன் உள்ளிட்ட தலைவர்கள் செயற்குழுக் கூட்டத்தில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாவார்கள் என தெரிகிறது.
கட்சியில் உழைத்தவர்களை ஓரங்கட்டிவிட்டு பிற கட்சிகளிலிருந்து காங்கிரஸுக்கு தாவியவர்களுக்கு டிக்கெட் தரக்கூடாது என்பது ராகுலின் அறிவுரை. ஆனால் பிற கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு டிக்கெட் தரப்பட்டுள்ளது. அப்படி டிக்கெட் வழங்கிய தலைவர்கள் இந்த கூட்டத்தில் பதில் சொல்ல வேண்டிவரும். செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மகன் அனில் சாஸ்திரி உள்பட பலருக்கு சிறப்பு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.